யூபிலி ஆண்டு JUBILEE YEAR Jeffersonville, Indiana, USA 54-10-03E 1. மாலை வணக்கம், நண்பர்களே . இந்த இரவின் பொழுதில் இங்கிருப்பதற்காக நான் மிகுந்த சந்தோஷமடைகிறேன். எல்லோரும் விரும்பி வரத்தக்கதான ஓர் அருமையான வரவேற்பு இங்கு இருக்கிறது. இது என்னை நன்றாக உணரும்படி செய்கிறது. இப்பொழுது நடைபெற்ற என்னுடைய கூட்டங்கள் எல்லாம் சுகமளிக்கும் கூட்டங்களாக இருந்ததினால் என்னால் வேத பாடங்களை தியானிப்பதற்கோ அல்லது உங்களோடு சற்று பேசுவதற்கோ அல்லது எதையுமே செய்வதற்கு தருணமில்லாதிருந்தது. ஆனால் நான் பேசுவதில் விருப்பம் கொண்டவன். அதை எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள். என்னுடைய தாய் இவ்விதமாக சொல்வதுண்டு, நான் நடப்பதற்கு முன்னதாகவே பேசினேன் என்று. அதனுடைய அர்த்தம் என்னவென்று முன்னோர் கூறுவதை அறிவீர்கள். ஆனால் தேவனோ என்னுடைய இருதயத்தை மாற்றி அவரைப் பற்றியே பேசும்படி செய்தார். அதற்காக நான் சந்தோஷப்படுகிறேன். பார்த்தீர்களா? நான் எப்பொழுதும் அவருடைய புகழையே பாடிக்கொண்டும், அவரைப் பற்றியே பேசிக்கொண்டும் மரிக்க விரும்புகிறேன். அப்படிச் செய்வதே சரி என்று நான் நினைக்கிறேன். நமக்கு இராப்போஜன ஆராதனை இன்றிரவு இருப்பதால் நமக்கு நேரம் அதிகம் இல்லை . மற்றும் புதன் கிழமை அன்று வேதபாட ஆராதனை இருக்கும். கர்த்தருக்குச் சித்தமானால், சில காரியங்களை அன்று போதிக்கப்போகிறோம். 2.இப்பொழுது, இந்த இரவிலே, கர்த்தருக்குச் சித்தமானால், குறுகிய நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் உங்களோடு பேச விரும்புகிறேன். இன்று நான் பிரசங்கிக்கிறது சற்று எதிர்பாராததாக இருக்கிறதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் "சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும்; உனக்குள்ளாக இருக்கும் நம்பிக்கையைக் குறித்து உன்னிடத்தில் கேட்கிற யாவருக்கும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிரு" என்று வேதம் கூறுகிறதை விசுவாசிக்கிறேன். ஆகவே எனக்குள்ளாக இருக்கும் நம்பிக்கையைக் குறித்து நான் சாட்சி பகரும்போது நிச்சயமாகவே எனக்கு ஆசீர்வாதமாய் இருக்கிறது. நீங்களும் அதை ஏற்றுக் கொள்ளும்போது அது உங்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்குமென நம்புகிறேன். ஆகவே எனக்குள் இருக்கும் அதே நம்பிக்கை உங்களுக்குள்ளும் இருக்கும்போது, நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தின் சக பிரஜைகளாக இருக்கிறோம். இப்பொழுது நியூ ஆல்பனியிலுள்ள மெத்தடிஸ்ட்சபையில் நடந்த எழுப்புதல் கூட்டங்களைப் பற்றி கேள்விப்பட்டேன். அதற்காக நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். சகோதரன் பிலீமேன் அவர்கள் சற்று முன்னதாக அறிவித்த லூர்வில் கூட்டத்தைப் பற்றி நான் கேள்விப்படவில்லை, ஆனால் நீங்கள் அதைக் குறித்து அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அந்த எழுப்புதல் கூட்டங்கள் நடைபெறுகிற இடத்தின் அருகே இருக்கிறவர்கள், நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள் என்பதை காண்பிக்கும் பொருட்டு, அங்கு சென்றுஅதில் கலந்து கொண்டு தேவனுடைய பிள்ளைகளோடு உங்களை பிரதிநிதிப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் தேவனை சார்ந்தவர்கள்! நாம் எப்பொழுதும் அவருடைய மக்களோடே நம்மை பிரதிநிதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். 3.இப்பொழுது சகோதரன் நெவில் கூறிய வண்ணமாக புதன் கிழமை ஆராதனையானது வேதப்பாட ஆராதனையாக இருக்கும். நீங்கள் வழக்கமாக வேதப்பாட போதனையைக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இல்லையா சகோ. நெவில்? (சகோதரன் நெவில் "ஆம்" என்கிறார்). அது மிகவும் நல்லது. வார்த்தையை போதிப்பது எப்பொழுதுமே சபையைஉறுதியாக வைக்கும்! ஏனெனில் மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்கிறான். மற்றும் இன்று காலை வேளையிலே தேவனுடைய வார்த்தையானது எப்படி ஒருபோதும் விழுந்து போகாது என்பதையும், எப்படி நிறைவேறினது என்பதையும் குறித்துப் பார்த்தோம். 4.பாடல்களை அவர்கள் பாடிக் கொண்டிருந்தபோது, நான் எதைக் குறித்துப் பேசப்போகிறேன் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். உடனே, "எல்லா பரிசுத்தவான்களும் தங்கள் நெற்றியிலே ஒரு முத்திரையைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்லப்பட்டதைக் குறித்து நினைக்க ஆரம்பித்தேன். பார்த்தீர்களா? நாம் அங்கே கடந்து சென்ற பிறகு, பரிசுத்தவான்கள் யாவரும் தங்கள் நெற்றியிலே ஒரு முத்திரையைக் கொண்டிருப்பார்கள். மேலும் இன்றிரவு, நான் வேதத்திலுள்ள ஒரு வசனத்திலிருந்து ஒரு பகுதியை மாத்திரம் வாசிக்கலாம் என நினைக்கிறேன். அது சுவிசேஷப் புத்தகங்களில் இருக்கிறது. இயேசு அவருடைய முடிவான வாக்கியத்தை வாசித்து முடித்தபின்னர், "இன்றைக்கு, இந்த வார்த்தைகள் நிறைவேறினது" என்றார். கிறிஸ்து, அவருடைய துவக்கத்திலே, அதாவது அவருடைய ஊழியத்தின் துவக்கத்திலிருந்தே அவர் தேவகுமாரனாகவே இந்த உலகத்தில் பிறந்திருந்தார். அது உண்மைதான். அவர் 'கர்த்தராகிய இயேசுவானவராக' பிறந்திருந்தும், எட்டாம் நாளிலே விருத்தசேதனம் செய்யப்பட்ட பிறகே அவருக்கு இயேசு என்று பெயர் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பிறக்கும்போதே ஆண்டவராகிய கிறிஸ்துவாக பிறந்தார். 'இயேசு என்ற பெயர் கொடுக்கப்பட்டது அவருக்களிக்கப்பட்ட பெயர். கிறிஸ்து என்பது அது அவர் என்னவாயிருக்கிறார் என்பதைக் குறிக்கிற பட்டப்பெயர்; ஆனால் அவர் பிறக்கும்போதே கிறிஸ்துவாயிருந்தார், தேவனாலே அபிஷேகிக்கப்பட்டவர். 5.வழக்கமாக இராப்போஜன ஆராதனையானது சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதினால், நான் இப்பொழுது அதிக நேரம் பிரசங்கம் செய்யாமல், ஒரு நல்ல இராப்போஜன ஆராதனையைக் கொண்டிருக்கத்தக்க போதுமான அளவு தேவனுடைய ஆவியான வரை நம்மத்தியில் உணரும் அளவிற்கு மாத்திரமே பேசப் போகிறேன். இங்கே அறிவிக்கப்பட்ட எல்லா ஆராதனைகளையும், எழுப்புதல் கூட்டங்க ளையும் மற்றும் வியாதியஸ்தரையும், தேவையுள்ளவர்களையும் நினைவில் கொண்டிருங்கள். சற்று நேரத்திற்கு முன், அவர், ஓர் வீட்டிற்கு விஜயம் செய்ததில், அங்கே பிசாசினால் பீடிக்கப்பட்ட ஒரு சிறுவன் விடுதலையடைய வேண்டுகிறான் என்று என்னிடம் கூறினர். இப்பொழுது வேதமானது, இப்படிப்பட்ட மக்களுக்காக நாம் ஒன்றாகக் கூடி ஜெபிக்க வேண்டுமென கூறுகிறது. 6.இங்கே அனேக வருடங்களுக்கு முன்பாக, ஜார்ஜி கார்டர் என்ற பெயருடைய ஒரு வாலிபப் பெண் ஒருவள் தரிசனத்தின் மூலம் சுகமடைந்ததை நீங்கள் அறிவீர்கள். காச நோயினால் பாதிக்கப்பட்டு எட்டு வருடம் ஒன்பது மாதங்களாக, படுக்கையை விட்டு எழும்பாமல் இருந்த அவள், தன்னுடைய வேதனையின் படுக்கையிலிருந்து எழுப்பப்பட்டாள். அவளுக்காக நான் அங்கே ஜெபிக்கப்போயிருந்தேன். நீங்கள் அந்த சம்பவத்தை அறிந்திருக்கிறீர்கள். அவருடைய தாயாரும் தந்தையும் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து விசுவாசமற்றவர் களாயிருந்தார்கள். அவர்கள் என்னையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்தப் பெண்ணோ சுகமாக வாஞ்சையாயி ருந்தாள். ஒரு நாளிலே, நான் சகோதரன் ரைட் அவர்களின் இடத்திலே ஞானஸ்நான கூட்டத்தைக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண் அங்கே வந்து ஞானஸ்நானம் எடுத்துக் கொள்ள விரும்பினாள். ஆனால் அவளால் தன் படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாதிருந்தது. அவள் அந்தப்படியே கிட்டத் தட்ட எட்டு அல்லது ஒன்பது வருடங்களாக இருந்திருந்தாள். நான் அப்போது அங்கே இருந்த அடர்ந்த காட்டுப் பகுதியிலே ஜெபம் செய்து கொண்டிருந்தபோது, சகோதரி உட்ஸ் அவர்கள் இரவு உணவிற்காக அழைப்பு மணியை அடித்தார்கள். எனக்கு நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னம் மிக நெருங்கி இருந்ததினால் அந்த மணியின் ஓசையை கேட்கக் கூடாத அளவிற்கு நான் ஜெபித்துக்கொண்டிருந்தேன். இருளடைய தொடங்கினது. அப்போது அங்கே இருந்த ஒருஅடர்த்தியான புதரின் (Dogwood bush) நடுவினிலே ஒரு வெளிச்சம் பிரகாசிக்கிறதைக் கண்டேன். அது என்னிடம், "கார்டர் வீட்டாரிடம் செல்" என்று கூறினது. 7.சகோதரன் ரைட், நீங்கள் அங்கே என்னோடு இருந்தீர்கள் அல்லவா? (அதற்கு சகோதரன் ஜார்ஜ் ரைட், "ஆம் ஐயா" என்கிறார்) நாங்கள் அங்கே சென்றபோது காரியங்கள் எவ்விதமாக இருக்கும் என்று தரிசனம் சொன்னதோ அப்படியே எல்லாம் நடந்தது. ஒன்பது வருடம் எட்டு மாதங்களாக காச நோயால் பீடிக்கப்பட்டு, படுக்கையிலிருந்து எழுந்திராத ஜார்ஜியா, அந்த நிமிடத்திலேயே குணமானாள். அதன் பின் எனக்கு தெரிந்த மட்டில் அவள் இது மட்டுமாக ஜலதோஷம் அல்லது அது போன்றவற்றினாலொழிய மறுபடியும் படுக்கைக்கு திரும்பினதில்லை. அவள் இப்பொழுது மறுபடியும் சுகவீனமாய் இருக்கிறாள் என்று கேள்விப்பட்டேன். நான் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்பதாக சகோதரன் ரைட் அவர்களின் இடத்தில் ஒரு கூடுகை நடத்தின்போது அவள் அங்கு வந்திருந்தாள். அவள் அங்கிருந்து கடந்து போன பிறகு, நான் ஜார்ஜியிடம் போகும்படி கர்த்தருடைய ஆவியானது என்னை அழுத்திக் கொண்டிருக்கிறது என்று சகோதரன் ரைட்டிடம் கூறினேன். அவள் மார்பக புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு அவளுடைய கடைசி கட்டத்தில் இருக்கிறாள் என்று கேள்விப்பட்டேன். இனியும் போராட பெலனில்லாமல் மரிக்க தன்னை ஒப்புக்கொடுத்து அதை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயி ருந்திருக்கிறாள். அதன்பின் நான் திரும்பவும் வந்திருக்கிறேன் என்பதை அவள் கேள்விப்பட்டபோது, அவள் தன் படுக்கையை விட்டு எழுந்தாள். நான் அவளுடைய அந்த சிறு உள்ளத்தை ஆசீர்வதிக்கிறேன். அவள் இப்பொழுது குணமாகப் போகிறாள் என்று விசுவாசிக்கிறாள். ஒரு அழிவுள்ள மனிதனின் ஜெபத்தை தேவன் கேட்பார் என்பதில் நம்பிக்கையை கொண்டிருக்கிறாள். அது நிச்சயமாகவே அதிகமான விசுவாசம் தான். ஜார்ஜியை என்னுடைய சகோதரியைப் போல் நேசிக்கிறேன். கர்த்தர் அவளுடைய ஜீவனைத் தப்புவிப்பதற்காக நீங்கள் அனைவரும் என்னோடு சேர்ந்து ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் அங்கு செல்லும்போது, நான் என்ன சொல்ல வேண்டுமோ அதை தேவன் எனக்குச் சொல்லுவார்... 8.அது போன்று அநேகர் சுகவீனமாய் இருக்கின்றார்கள். மிஸ்டர். வயிஸ் ஹார்ட் (சகோ. ஜிம்வயிஸ் ஹார்ட்) என்பவர் ஒருவர் இங்கு முன்பெல்லாம் வருவதுண்டு. அவருடைய சகோதரனின் மகன் நின நீர் சுரப்பி புற்றுநோயினால் (HODKINS DISEASE) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறான். அந்த நோய் புற்றுநோயைக் காட்டிலும் கொடியது என்பதை நீங்கள் அறிவீர்கள். நம்முடைய சபையிலும் அவ்விதமான நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கொஞ்ச நாட்களுக்கு முன்பு குணமடைந்ததை நாம் கண்டிருக்கிறோம். அந்த வாலிப பெண்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அவள் முப்பது நாள் மட்டுமே ஜீவிப்பாள் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். அந்நேரத்தில் அவள் இங்கிருக்கும் மேல்நிலை பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தாயார் இங்கு வந்து, தன்னுடைய ஜீவியத்தை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து, ஞானஸ்நானம் எடுத்து கொண்டிருந்தார்கள். அந்த பெண்னும் அந்தப்படியே செய்தாள். அவள் 'கூடிய சீக்கிரம் மரிக்கப் போகிறாள்' என்பதை குறித்து அவளுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் அவள் ஒரு காலை வேளையிலே ஜெபவரிசையில் வந்து கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவளுடனே இடைப்பட்டு அவளுடைய எல்லா காரியங்களையும் அறிந்து கொண்டார். அவர்களால் அந்த நோயின் அறிகுறியை சிறிதும் காணக்கூடாத அளவிற்கு அங்கேயே குணமானாள். அது கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு முன்பு நடந்தது என்று நினைக்கிறேன். நான் அந்த பெண்னை ஒரு வருடத்திற்கு முன்பு மறுபடியும் சந்தித்தேன். அவளுக்கு இப்பொழுது திருமணமாகிவிட்டது என்று நினைக்கிறேன். அவள் நன்றாக இருக்கிறாள். அதன்பின் அந்தநோய் அவளை ஒரு போதும் பாதிக்கவில்லை . இப்பொழுது தேவனால் ஹாட்கின்ஸ் நோயை குணப்படுத்த முடியும், அது அவருக்கு ஒரு பொருட்டல்ல. "நானே உன் எல்லா வியாதிகளையும் குணப்படுத்தும் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்". ஆகவே வியாதியஸ்தர்களுக்காகவும் மற்றும் நடக்க இருக்கிற கூட்டங்களுக்காகவும் சற்று அவரிடம் மன்றாடலாம். 9.இரக்கமுள்ள பரலோகப் பிதாவே, இப்பொழுது நாங்கள் கூடியிருக்கும் இந்த அருமையான சிறு இடமானது பார்ப்பதற்கு மிக சாதாரணமானதாக காட்சியளித்தாலும் நீர் எங்களை அநேக முறை இங்கு ஆசீர்வதித்தீர் என்பதை அறியும் பொழுது நாங்கள் நிச்சயமாகவே மிக செளகரியமாய் உணருகிறோம். ஓர் இரவிலே, யாக்கோபு தன் சகோதரனிடமிருந்து ஓடிவந்த பிறகு ஒரு தரிசனத்திலே, தேவதூதர்கள் ஏணியிலே மேலே ஏறுகிறதையும், கீழே இறங்குகிறதையும் கண்டபோது அங்கிருந்த கற்களை ஒன்றாக சேர்த்து கட்டி, "இது கர்த்தருடைய வீடு" என்று அழைத்தான். அதே உணர்வை இந்த சிறிய இடத்திலும் உணருகிறேன். பிதாவே, இன்றிரவு, இந்த பெத்தேலில், கர்த்தருடைய வீட்டில் கூடியிருக்கிற மக்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று கேட்கிறேன். வியாதியஸ்தருக்கும் மற்றும் எங்களுடைய சகோதரனை சந்திக்கவிருக்கும் அந்த பிசாசினால் பீடிக்கப்பட்ட வாலிபனுக்காகவும் நாங்கள் ஏறெடுக்கிற ஜெபத்தை கேட்டருளும். மற்றும் ஆண்டவரே, சிறிய ஜார்ஜியாக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, மரணம் அவளை விழுங்கும்படி அனுமதியாதேயும். நீர் அவளை பண்ணிரெண்டு பதினான்கு வருடங்களுக்கு முன்பாக தப்புவித்தீர். தொடர்ந்து நீர் அவளை இப்பொழுதும் தப்புவிப்பீர் என ஜெபிக்கிறேன். காச நோயை அவளிடமிருந்து அகற்றிய தேவன் புற்று நோயையும் அகற்ற வல்லவராய் இருக்கிறீர். நீரே தேவன்! பிதாவே நாங்கள் உம்மை நேசிக்கிறோம். இதை நாங்கள் உறுதியான விசுவாசத்தோடு கேட்டுக் கொள்கிறோம். மற்றும் ஆண்டவரே, மருத்துவமனையில் முழுவதும் கைவிடப்பட்டு மரிக்கும் தருவாயில் இருக்கும் இளம் போர் வீரனுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவே அப்படியான ஒரு சமயத்தில் நீர் பவுலிடம்,"பவுலே திடன் கொள்" என்று சொன்னீர். ஆண்டவரே நீர் மற்றொரு விசை பேசுவீராக. நீர் தாமே அந்த வாலிபனுடைய ஜீவனை தப்புவிக்கும்படி ஜெபிக்கிறோம். அதை அருள்வீராக. ஆண்டவரே, அவன் மரிக்காமல் இருக்கட்டும். கர்த்தருடைய மகிமையானது அவனுடைய ஜீவியத்திலே வெளிப்படும்படி அவன் ஜீவிக்கட்டும். எங்களுக்கும் இந்த இரவின் ஆராதனையில் உதவி செய்வீராக. எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னித்தருளும். ஆண்டவரே, என்ன பிரசங்கிப்பது என்று தெரியவில்லை, இருந்தாலும் எல்லாவற்றையும் உம்மிடத்தில் ஒப்புக் கொடுக்கிறோம். உமக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக. இதை உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 10.இப்பொழுது, நாம் ஆராதிக்கிற, கர்த்தராகிய இயேசுவை குறித்துப் பேசுவதை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர் நமக்கு மிகவும் நல்லவராயிருக்கிறார். நாம் எல்லோரும் அவரை நேசிக்கறோம். இந்த இரவிலே, அவர் நம்மத்தியில் இருக்கிறார் என்பதை நாம் மாத்திரம் அதை பார்ப்போமானால்) உணர்வதே நமது இருதயத்தின் ஆழமான வாஞ்சையாய் இருக்கிறது என்று உறுதியாய் நம்புகிறோம். அவர் இங்கே இருக்கிறார் என்பதை என்னால் நிச்சயமாய் சொல்லமுடியும். இந்த பூமியிலும், வானத்திலும் மற்றும் கடலிலும் பிரசன்னமாயிருக்கிற அவருடைய ஆவியே இன்றிரவு இந்த அரங்கத்திலும் நம்முடன் இருக்கிறது. அவர் நம்முடைய துதிகள் அவருடைய பார்வையில் ஏற்றுக்கொள்ளத்தக்க தாயிருக்கிறது. அவர் ஆராதிக்கப்படுவதை அவ்வளவாக நேசிக்கிறார். 11.இப்பொழுது நாம் எதற்காக இங்கு கூடியிருக்கிறோம் என்ற சில அடிப்படை காரியங்களை சற்று பார்க்கலாம். தேவனுடைய வீடு ஒரு திருத்துதலின் ஸ்தலமாயிருக்கிறது. ஆகவே நியாயபிரமாணமானது தேவனுடைய வீட்டிலிருந்து துவங்குகிறதாயிருக்கிறது. இப்பொழுது நாம் ஜீவிக்கிற இந்த இருண்ட நிழலோட்டமான காலத்திலே, நான் பிரயாணம் செய்து எல்லா நாடுகளிலும் பார்த்த பிறகு நமக்குள்ள ஒரே ஒரு நம்பிக்கை என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகை மாத்திரமே என்று நினைக்கிறேன். அவர் முதலாம் வருகையிலே வந்தது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவாக இரண்டாம் வருகையிலும் வருவது நிச்சயம். அதை என்னுடைய முழு இருதயத்தோடும் என்னுடைய முழு ஜீவனோடும் விசுவாசிக்கிறேன். 12.இன்று காலை வேளையில் நாம் பார்த்தபடி, அவருடைய வார்த்தையானது நிறைவேற்றப்பட வேண்டியதாயிருக்கிறது. தேவனுடைய எண்ணமானது அவருடைய வார்த்தையின் மூலம் பிரத்தியட்சயமா கிறது. மற்றும் அது நிஜத்திற்கு கொண்டுவரப்படுகிறது. இப்பொழுது புதிதாக வந்திருப்பவர்களுக்காக இதைச் சொல்லுகிறேன். இந்த காலையிலே நாங்கள், "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது" என்ற பொருளைப் பார்த்தோம். இப்பொழுது, ஆதியிலே வார்த்தை இருந்தது. ஆனால் அது வார்த்தையாவதற்கு முன்பாக, அது ஒரு எண்ணமாக இருந்தது. வார்த்தை ஓர் எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்கிறது. தேவன் அதை வார்த்தையாக உருவாக்குவதற்கு முன்பு முதலாவது அதை குறித்ததான ஒரு எண்ணத்தைக் கொண்டவராக இருக்கவேண்டும். அதன் பின் அவர் அந்த வார்த்தையை பேசினபொழுது அது பொருளாகிறது. இப்பொழுது கர்த்தராகிய இயேசுவை அனுப்பினவர் அவரே அவருடைய வார்த்தை உரைக்கப்பட்டபோது, அது உருவமாகி தேவகுமாரனாக மாறினது. குற்றமுள்ளவர்களாகிய நம்மை மீட்டு தேவனிடம் மறுபடியும் ஐக்கியம் கொள்ளும்படி குற்றமில்லாதவராகிய அவரே நமக்காக மரித்தார். அதினாலே, நீதியுள்ள தேவகுமாரனுடைய இரத்தத்தை தியாக பலியாய் கொடுத்ததைக் கொண்டு, ஒரு விசை தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டிருந்த யாவரும் தேவனிடத்திற்கு கிட்டி சேரமுடியும். இப்பொழுது அவர் முதலாவது வருகையிலே மீட்பராய் வந்திருந்தது எவ்வளவு நிச்சயமோ அதே போல் அவர் மணவாளனாக இரண்டாம் வருகையிலே வருவதும் நிச்சயம். அவர் நிச்சயம் வருவார். அனேகர் நாம் "ஆ! இப்படி பல காலங்களாக சிந்தித்துக் கொண்டேயிருந்து அநேக வருடங்கள் ஓடிவிட்டன" அவ்விதமாகத்தான் அவருடைய முதலாம் வருகைக்கு முன்பாகவும் நினைத்தார்கள். அதே போல் தான் அவருடைய இரண்டாம் வருகையிலும் சிந்திக்கக் கூடியதாக உள்ளது. ஏனெனில் "எங்கள் பிதாக்கள் மரித்ததிலிருந்து எந்த ஒரு வித்தியாசமும் இல்லையே. எப்படி உலகம் ஆரம்பத்திலிருந்ததோ அப்படியே இருக்கிறதே" என்று சொல்லுவார்கள் என்று வேதாகமம் கூறிற்று. ஆகவே நீங்கள் நினையாத நேரத்திலே இந்த காரியங்கள் சம்பவிக்கும். இது நமக்கு ஏற்றதாய்...... 13.தேவன், அமெரிக்காவிலிருக்கிற அமெரிக்க கிறிஸ்தவர்களாகிய நம்மிடத்தில் அதிகமாக கணக்கு கேட்கப்போகிறார். ஏனென்றால் நாம் உண்மையான சுவிசேஷ வெளிச்சத்தைப் பெற்று அதை எப்படி உபயோகப்படுத்தியிருக்க வேண்டுமோ அப்படி அதை பயன்படுத்த தவறினோம். ஆகையால் இந்த இரவின் பொழுதிலே, ஒரு தவறான முடிவை எடுக்கிறதினாலே, எப்படி உங்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் மனந்திரும்புதலின் நேரத்தை இழந்து போவீர்கள் என்பதையும், எப்படி கிறிஸ்துவினிடத்தில் இருந்து எந்த பங்கையும் கொண்டிராமல் அறுப்புண்டு போவீர்கள் என்பதையும் குறித்து குறிப்பாக கிறிஸ்தவனிடத்தில் பேசப்போகிறேன். இந்த காரியங்கள் சற்று கடினமானதாக தான் இருக்கும். ஆனாலும் ஒரு சில நேரங்களில் கடினமாக இருக்க வேண்டியது அவசியமாய் இருக்கிறது. ஏனெனில் அது தான் நம்மை கர்த்தராகிய இயேசுவைப் பாராட்டும்படிச் செய்யும். 14.நான் இன்று வெளியே சென்று கொண்டிருந்தபோது ஒரு சகோதரன் என்னைச் சந்தித்தார். பணப் பிரச்சனை அவருடைய இருதயத்தை அதிக பாரப்படுத்தினது. அவர் "சகோதரன் பிரான்ஹாம், இந்தியாவில் உள்ள ஏழை மக்களைக் குறித்து கேள்விப்பட்ட பிறகு, என்னை சற்று தேற்றிக் கொண்டேன், ஆனாலும் எப்பொழுதுமே இந்த காரியம் என்னை ... என்னுடைய உடல் நலம் என்னவோ சுகமாகத்தான் இருக்கிறது, இருப்பினும் இந்த தொல்லைகள் எப்பொழுதுமே என்னை நிலை குலையசெய்கிறது" எனக்கூறினார். அதற்கு நான், தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு பிள்ளையும் அவரால் சிட்சிக்கப்பட வேண்டியது அவசியமாயிருக்கிறது" என்று கூறினேன். நாம் பார்ப்பதற்கு குற்றமற்றவர்களாய் காணப்பட்டாலும், நாம் சோதிக்கப்பட வேண்டியது அவசியமாய் இருக்கிறது. அதினாலேயே தேவனுடைய சாட்டை நம் மேல் வைக்கப்படுகிறது.நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய குமாரர்கள் என்று நிரூபிக்கும் பொருட்டு அதைச்செய்கிறார். ஆகவே திருத்துதலை விரும்பாத எந்த நபரும் வேசிப் பிள்ளைகளாய் இருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்க முடியாது. ஆனால் எந்த ஒருநபரும் (புருஷனோ அல்லது ஸ்திரீயோ) தேவனிடத்திலே அடியை ஏற்றுக்கொண்டு, சகலமும் தலை கீழாகப் போனாலும், அப்படியே எங்கேயும் ஓடாமல் அங்கேயே நின்று இன்னுமாக தங்கள் தலையை உயர்த்தி "ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன்" என்று சொல்லுகிறார்களோ, அவர்களே தேவனுடையவர்கள். முடிவுபரியந்தம் சகித்து நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான். ஓ, நான் அதை நேசிக்கிறேன், நீங்களும் அதை விரும்பவில்லையா? (சபையோர் ஆமென் என்கின்றனர்) 15.பாருங்கள், உபத்திரவம் பொறுமையை பிறப்பிக்கும், பொறுமை நம்பிக்கையை பிறப்பிக்கும், நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது தான் காரியம். பார்த்தீர்களா? "உபத்திரவம் பொருமையை பிறப்பிக்கும்" ஆகையால் பொருமையாயிருங்கள். "நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது". ஆகவே இன்றிரவில் நாம் நம்பிக்கையைப் பெற்ற மக்களாய் இங்கிருக்கிறோம். நம்முடைய எல்லாவிதமான உபத்திரவங்களும் நமக்கு உதவி செய்கிறது. உபத்திரவங்கள் நம்மை பொறுமைசாலிகளாக்குகிறது. அது நம்மை தேவனுடைய வருகைக்கு காத்திருக்கச் செய்கிறது. அவர் பரத்திலிருந்து இரண்டாம் வருகையிலே (மகிமையிலும், ராஜரீகத்தி லும் வெளிப்படும்போது, சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவிக்கும். மற்றும் அவருக்குள் நித்திரையடைந்தவர்களுடைய அழிவுக்கேதுவான சரீரமானது அவருக்கொப்பான அவருடைய சொந்த மகிமையின் சரீரம்போல் மாறும். அவர் சகலத்தையும் அவருடைய கட்டுக்குள் கொண்டிருப்பார். ஆகவே தேவனுடைய வருகையின் மகத்தான நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற கிறிஸ்தவர்களாய் இன்றிரவிலே மகிழ்ச்சியோடும், களிப்போடும் இருக்கிறதைத் தவிர வேறு எப்படி இருக்கமுடியும். இயேசு மறுபடியும் இங்கே அவருடைய வார்த்தையைக் குறித்து பேசுகிறார். 16.சில நாட்களுக்கு முன்பாக ஒரு அருமையான சகோதரன் என்னை சற்று பார்க்கும்படியாக வந்தார். ஒருவேளை அவர் இந்த கட்டிடத்தில் இருக்கக்கூடும். அவர் இருக்கிறதாக என்னால் பார்க்க முடியவில்லை . அவர் என்னிடம், "சகோதரன் பிரான்ஹாம், நான் வார்த்தையை மெச்சிக்கொள்கிறேன்" என்றார். அவ்வளவுதான், அவர் 'வார்த்தை ' என்று மாத்திரமே சொன்னார். பாருங்கள், வார்த்யைானது நிலை வரப்பட்டதாக இருக்கிறது. அது... நீங்கள் யாரோ ஒருவர் சொன்ன காரியத்தின் மேலாக விசுவாசத்தை கொண்டிருக்க முடியாது. ஒரு அஸ்திபாரம் அதற்கென்று இருந்தாக வேண்டும். தேவனுடைய வார்த்தையை காட்டிலும் பெரிய அஸ்திபாரம் இருக்க கூடுமோ? வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், அவருடைய வார்த்தை நித்தியத்தை போல் அழிவில்லாததாய் இருக்கிறது. அது எக்காலத்திலும் மாறாமல் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். கவனியுங்கள், இயேசுவானவர் ...... 17.இப்பொழுது நமக்கு இராபோஜன ஆராதனை இருப்பதால் நம்முடைய பொருளுக்கு நாம் துரிதமாய் செல்லவேண்டியதாயிருக்கிறது. அது நாம் செய்ய வேண்டிய பாகமாக இருக்கிறது. ஆகவே இயேசுவின் நாமத்தை அழைக்கிற எந்த ஒரு ஆணும், பெண்ணும், சிறுவனும், சிறுமியும், ஒவ்வொருவரும் நீங்கள் உங்கள் இருதயத்தை தேவனுடைய இராபோஜன பந்திக்காக ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். அது அருமையான காரியம். "என்னுடைய மாம்சத்தை புசித்து என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவனே நித்திய ஜீவனை பெற்றுக்கொள்கிறான். கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன். அதை புசியாதவனுக்கோ என்னிடத்தில் எந்த பங்கும் இல்லை. அதை அபாத்திரமாய் புசிக்கிறவனும் குடிக்கிறவனும் தனக்குதானே ஆக்கினைத் தீர்ப்பை புசித்தும் குடித்தும் கொள்கிறான்" என்று கர்த்தராகிய இயேசு கூறினார். ஓ, அது எப்பேற்பட்ட நேரம் பாருங்கள். நாம் இன்னும் சற்று நேரத்திற்குள்ளாக அதை அனுசரிக்கவிருக்கும் அந்த மகத்தான நேரத்திற்காக ஆயத்தப்படுவோமாக. நம்முடைய கூடாரத்தில் நடைபெறுகிற ஆராதனைகளில் மகத்தானவைகளில் ஒன்றாக இராபோஜன ஆராதனை இருக்கிறது என்று நினைக்கிறேன். 18.நம்முடைய கர்த்தரின் ஆரம்ப ஊழிய நாட்களில் பார்ப்போமானால், அவர் கப்பர்நகூமிற்கு வந்து (அங்கு தான் என்று நினைக்கிறேன்) ஓய்வு நாளிலே தேவாலயத்தில் அமர்ந்தார். அப்போது தேவாலயத்தின் ஊழியக்காரர் அவரிடம் வாசிக்கும்படி சுருளை ஒப்படைத்தார். நீங்கள் கவனிப்பீர்களென்றால் நாமும் அதே விதமான முறைமைகளில் சிலவற்றை இங்கு கொண்டிருக்கிறோம். இயேசு வசனங்களை வாசித்த பின்னர் அவருடைய போதனைகளை அதின்மேல் ஆதாரப்படுத்திப் பேசினார். சில நேரங்களில் அது யூதர்களுடைய எண்ணங்களுக்கு முரண்பட்டதாக இருந்தது. இருப்பினும் அவரை குற்றம் சாட்டக் கூடியவன் யார்? அவர் மகிமையின் தேவன். அவர் ஏசாயாவில் குறிப்பிட்டுள்ள, "கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தை பிரசங்கிக்க என்னை அபிஷேகம் செய்தார்" என்பதை வாசித்தார். அவர் அதை வாசித்து, அத்துடன் முடித்து, புத்தக சுருளை சுருட்டி வைத்து அங்கிருந்த மக்களைப் பார்த்து, "இந்த நாளிலே இந்த வேத வாக்கியம் உங்களுக்கு முன்பாக நிறைவேறிற்று" என்றார். இதை ஏசாயா தீர்க்கதரிசி , நுாற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், ஏறக்குறைய ஐநூறு அல்லது எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னதாக, "கிறிஸ்துவானவர் வரும்பொழுது, அவர் கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தை பிரசங்கம் செய்யும்படி" அபிஷேகம் பண்ணப்பட்டிருப்பார் என்று ஏவப்பட்டு தீர்க்கதரிசனமாக உரைத்திருந்தார். அப்படிச் சொல்லி இருக்கும் பட்சத்தில், அது கச்சிதமாக அவ்வண்ணமே நடந்தாக வேண்டும். ஏனெனில் தேவன் தம்முடைய வார்த்தையை தீர்க்கதரிசியின் மூலம் உரைத்தபடியால் அவருடைய வார்த்தை யானது கண்டிப்பாக நடந்தேற வேண்டியதாய் இருக்கிறது. 19.இன்று காலை வேளையிலே நாம் ஏசாயாவின் நாட்களில் இருந்த மக்களைக் குறித்து பார்த்தோம். இயேசுவானவர் அவர்களுக்கு முன்பதாக அநேக அற்புதங்களை செய்திருந்தும் அவர்களால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் ஏசாயா ஏற்கனவே "எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசிக்கிறவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?" என்று உரைத்திருந்தார். "அவர்கள் குணப்படாதபடிக்கு அவர்களுக்கு காதுகளிருந்தும் கேட்கக் கூடாதவர்களாயும், கண்கள் இருந்தும் காணக்கூடாதவர்களாயும் இருப்பார்கள்" என்று கூறினார். ஏசாயா உரைத்ததினிமித்தம், இயேசு, மக்களுக்கு முன்பாக செய்த காரியங்களையும் அற்புதங்களையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போனது. உங்களுக்கு தெரியுமா? அதே தீர்க்கதரிசனம் இப்பொழுதும்... கவனியுங்கள், தீர்க்கதரிசனம் தானாக திரும்பத் திரும்ப தொடர்ந்து நிறைவேறுகிறதாய் இருக்கிறது. உங்களுக்கு தெரியுமா? தேவனுடைய வார்த்யைானது ஒரு சுழற்சியில் (மீண்டும் மீண்டுமாய்) தொடர்கிறது என்று! உதாரணத்திற்கு நான் ஒரு முறை வேதத்திலுள்ள ஓரக் குறிப்புகள் யாவையும் வாசிக்க முயற்சித்துக் கொண்டிருந்தபோது, மத்தேயு 2-ம் அதிகாரம் அல்லது 1 - ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். அதில், "எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வெளியே அழைத்தேன்" என்று தீர்க்கதரிசியின் மூலம் உரைக்கப்பட்ட வார்த்தையானது எகிப்திலிருந்து இயேசு வெளியே அழைக்கப்பட்ட காரியத்தை குறிக்கிறது. அது நம்முடைய கர்த்தர் மூலம் நிறைவேறின சம்பவம். ஆனால் அதே வாக்கியம் தான் தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே அழைத்தார் என்பதையும் குறிக்கிறது. ஏனெனில் இஸ்ரவேலரும் அவருடைய குமாரன் தான். அதேவாக்கியம் தான். ஆகவே மத்தேயு, "தேவன் தம்முடைய குமாரனாம் இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியே அழைத்தார்" என்ற அதே வாக்கியத்தை அவருடைய குமாரன் இயேசுவை எகிப்திலிருந்து வெளியே அழைத்தார் என்பதற்கும் குறிப்பிட்டார். பார்த்தீர்களா? 20.மேலும் நாம் இன்றைக்கு இங்கு வாசித்த தேவனுடைய வார்த்தையும், "அவர்களுக்கு கண்கள் இருந்தும் காணக் கூடாதிருப்பார்கள், காதுகள் இருந்தும் கேட்கக் கூடாதிருப்பார்கள்" என்பது மீண்டும் ஒரு முறை புறஜாதிகளின் நாட்களிலும் நிறைவேறினது. இந்நாட்களில் தேவன் அற்புதங்களையும் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்து கொண்டிருக்க, மக்களோ தங்களுடைய கண்களை வெறுமனே மூடிக்கொள்கிறார்கள். அவைகள் அவ்வண்ணமே நடந்திடும் என்று தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது இயேசு, "அநுகிரக வருஷத்தை போதிப்பார்" என்று ஏசாயா மூலம் தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்டிருந்தது. அதைத்தான் இன்றிரவு பார்க்க விரும்புகிறோம். இப்பொழுது "அநுக்கிரக வருஷம்" என்பது ஒரு காலத்தில் வருகிற அனேக வருடங்களிடையே வருகிற ஒரு குறிப்பிட்ட வருடமாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டின் நாட்களிலே அநுக்கிரக வருடம் என்பது யூபிலியின் வருடமாக அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஏழு ஆண்டுகளில் யூபிலி ஆண்டானது அனுசரிக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன். அவர்கள் ஒவ்வொரு ஏழு ஆண்டுக்கும் தங்கள் நிலத்திற்கு ஓய்வு கொடுப்பார்கள். அந்நேரத்தில் அவர்கள் எந்த கனியையும் விளையச் செய்யமாட்டார்கள். எதையும் பயிரிட மாட்டார்கள். ஒவ்வொரு ஏழு வருடமும் தங்கள் நிலத்தினை ஓயவிட்டனர். அந்த நேரமே யூபிலியின் நேரமாக அனுசரிக்கப்பட்டது. 21.மற்றும் அந்த நேரத்திலே, அடிமையாக விற்கப்பட்டிருந்த ஒவ்வொரு மனிதனும், அது எபிரேயனோ அல்லது தன் பிள்ளைகளை அடிமையாக விற்றிருந்தாலோ... இப்பொழுது இது கேட்பதற்கு மிக மோசமானதாக இருக்கக்கூடும். சில நாட்களுக்கு முன்பு அவ்விதமான காரியம் நடைபெற்றதை ஒரு இடத்தில் கண்டேன். புருஷர்கள் தங்கள் இளம் குமாரத்திகளை கொண்டு வந்து அடிமை சந்தையிலே அவர்களுடைய ஆடைகளை கழற்றி அடிமைகளாக விற்றனர். அப்போது எங்களோடு வழியில், சேர்ந்து கொண்ட ஒருவன், அவன் எங்கள் குழுவைச் சேராதவன் ஒரு அழகான வாலிப பெண்ணை முப்பத்தி ஐந்து டாலருக்கு வாங்கினான். அதற்கான சட்டபூர்வமான பத்திரத்தையும் பெற்றான். நீங்கள் கார் வாங்கும் போது எப்படி ஒருபத்திரமானது கொடுக்கப்படுகிறதோ அது போலவே அவனும் பெற்றுக் கொண்டான். சிலரை பத்து டாலருக்கும் விற்றனர். ஒரு சிலரை அப்படியே இலவசமாகவும் கொடுத்தனர். பாருங்கள், எங்கே இயேசு கிறிஸ்துவின் நாமமானது மதிக்கப்படாமல் இருக்கிறதோ, அங்கே மனிதர்களும் ஸ்திரீகளும் மிருகத்தை போல் ஆகின்றனர். அப்படியென்றால், ஒழுக்கம் மற்றும் இது போன்றகாரியங்கள் இருக்கிற இந்த தேசத்திலே நாம் ஜீவிக்கிறதற்காக நாம் தேவனுக்கு எவ்வளவு நன்றி செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆனால் தேவன் நமக்களித்த இந்த சுதந்தரத்தை நாம் கையாளுகிற விதானத்தைப் பார்க்கும்போது அது மிகவும் அவமானமாயிருக்கிறது. 22.அவர்கள் அடிமைகளாக விற்கப்படுவார்கள். அதன் பிறகு, இந்த பெண்ணானவள் விற்கப்பட்டபின், ஒரு மனைவியாகவோ அல்லது ஒரு வேலைக்காரியாகவோ இருப்பாள், அவளை விற்கும்போது இப்படியாக சொல்லி விற்பார்கள். அவளின் பற்களை பாருங்கள், அவள் எவ்வளவு பெலமுள்ளவளாய் இருக்கிறாள் என்று பாருங்கள், அவளால் வேலை செய்ய முடியுமா இல்லையா அல்லது அவள் கன்னித்தன்மை யுடையவளா இல்லையா என்று பாருங்கள்' என்று இது போன்று சொல்லுவார்கள். உங்களுக்கு எத்தனை பேர் வேண்டுமோ அத்தனை பேரையும் வாங்கிக்கொள்ளலாம். உங்களால் எத்தனை பேரை பராமரிக்க முடியுமோ மற்றும் எத்தனை பேரை உங்களால் வாங்க முடியுமோ அத்தனை பேரையும் வாங்கலாம். இதே அடிமை விற்கும் காரியம்தான் நம்முடைய ஆண்டவரின் நாட்களிலும் நடந்தது. ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கும் ஒருமுறை யூபிலி வரும். அது ஒரு மகத்தான நேரம். அது இன்றைய நாட்களில் வாழும் மக்களுக்கு ஒரு மகத்தான உதாரணமாக இருக்கிறது. நிச்சயமாக இது மகத்தான நேரம் தான்! 23.அந்த அடிமைகள் ஒரு வேளைகளத்திலே இருக்கலாம், அல்லது எங்கேயாவது வேலையில் இருக்கலாம், எங்கு இருந்தாலும் சரி, ஒரு வேளை அவர்களின் முதலாளியின் வேலையாட்கள் கூறின கடினமான வேலைகளை செய்யும்படி கீழே குனிந்து வேலை செய்துக் கொண்டிருக்கலாம். அந்த அடிமை அந்த முதலாளிக்கு சொந்தமானவள் என்று சட்ட பூர்வமான பத்திரத்தை கொண்டிருப்பதால் அவன் அவர்கள் மேல் முழு ஆண்டவனாகவும் எஜமானனாகவும் இருந்தான். அவன் அவர்களை ஒரு குதிரையைப் போல் அல்லது எப்படி வேண்டுமானாலும் நடத்துவான். ஏனெனில் அது அவனுடைய அடிமை. ஆனால் தேவனுடைய பிரமாணத்தின்படி ஒவ்வொரு ஏழு ஆண்டிற்கும் யூபிலியின் வருடம் உண்டாயிருக்க வேண்டும். அந்த யூபிலியின் வருடம் வரும்போது ஆசாரியன் தேசம் முழுவதும் சுற்றி எக்காளம் ஊதுவான்.அப்பொழுது கிரயம் கொடுத்து வாங்கப்பட்டு வேலையாட்களாயிருந்த ஒவ்வொரு அடிமையும்விடுதலை பெற்று தன் வீட்டிற்கு மீண்டுமாய் சென்று தன்னுடைய அன்பான குடும்பத்தோடு சேர அவனுக்கு சிலாக்கியம் கொடுக்கப்படுகிறது. அவன் கிருபையினால் மீட்கப்பட்டான். அவன் இனி எந்த ஒரு கிரயமும் செலுத்த வேண்டியதில்லை. அவனுடைய வீட்டாரும் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. அது தேவனுடைய செயலாயிருக்கிறது. எப்பேர்பட்ட ஒரு அழகான எடுத்துக் காட்டாக இருக்கிறது பாருங்கள். இன்றைக்கு நம்முடைய தேசத்திலும் மற்றும் எல்லா இடங்களிலேயும் புருஷர்களும் ஸ்திரீகளும் தங்களை பாவத்திற்கு விற்றுப்போட்டு, குடிப்பழக்கம், சூதாட்டம் மற்றும் குடித்து, நடனமாடி தாங்கள் செய்யத்தகாத காரியங்களைச் செய்து பிசாசிற்கு அடிமைகளாகி விட்டனர். 24.சில நாட்களுக்கு முன்பாக நான் ஒரு வாலிபப் பெண்ணை இங்கு சந்தித்தேன். அவள், "சகோதரன் பிரான்ஹாம், இந்த விஸ்கி மது பழக்ககட்டிலிருந்து விடுதலை பெற எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்" என்றாள். தொடர்ந்து அவள், "நான் சிறு பெண்ணாக இருக்கும் போது ஒரு சமயம் மது அருந்துகிற ஒரு பையனுடன் வெளியிலே சென்றேன், அதிலிருந்து நானும் துவங்கினேன். பின்னர் நாங்கள் பானங்களை ஒன்றோடொன்றாக கலந்து குடிக்க ஆரம்பித்தோம். அதன் பிறகு நான் அதற்கு முழுவதும் அடிமையாக மாறிவிட்டேன். நான் குடிக்கவில்லை என்றால் அவ்வளவு தான். நான் வெறி பிடித்ததை போல் நடந்து கொள்ளுவேன்" என்றாள். "இதை மட்டும் நான் விட்டொழித்திடுவேன் என்றால்....." என்றாள். அதற்கு நான், 'நீ உன் சொந்த முயற்சியால் அதை செய்ய முடியாது ஆனால் அதை உன்னிலிருந்து விடுவிக்கக்கூடிய ஒருவரை எனக்கு தெரியும். அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவர் உன்னை விடுவிக்கும்படி யாகவே வந்தார்" என்றேன். 25.இப்பொழுது நீங்கள் அதனுடைய மாதிரியை கவனிப்பீர்களானால், அதே யூபிலியின் வருடமானது இப்பொழுதும் மீண்டும் வந்திருக்கிறது. எப்பொழுதெல்லாம் எழுப்புதலானது பூமியின் மேல் நடக்கிறதோ ... சற்று முன்பாக தான் வேல்ஸ் எழுப்புதல் முடிவடைந்தது. நாம் மக்களை ஒன்றாக சேர்த்து இணைக்க ஓரல் ராபர்ட்ஸ் மற்றும் பில்லிகிரஹாம் போன்ற அனேகரை எவ்வளவுதான் தேசம் முழுவதும் அழைத்துச் செல்ல நினைத்தாலும் எழுப்புதலை கொண்டு வரக்கூடியவர் தேவன் ஒருவரே. ஆகவே நீங்கள் எவ்வளவுதான்... நாம் கிறிஸ்தவ வியாபார புருஷர்களின் சங்கத்தை கொண்டிருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அதெல்லாம் நல்லதுதான். சபை பாகுபாடற்ற ஊழியர்களின் சங்கத்தை கொண்டிருக் கும்படி அதிக பிராயாசப்படுகின்றனர். அது எல்லாம் நல்லதுதான். ஆனால் சகோதரனே அது மனிதனின் முயற்சியாய் இருக்கும் பட்சத்தில், அது எதுக்கும் உதவாது. தேவனுடைய ஆவியானவரால் மாத்திரமே மக்களை தொடமுடியும். 26.இப்பொழுது நடைபெற்ற இந்த வேல்ஸ் எழுப்புதலானது நிச்சயமாகவே வேல்ஸ் மக்களுக்கு ஒரு யூபிலியின் நேரமாக இருந்தது. படிப்பறிவற்ற சில மக்கள் ஒன்றாகக் கூடி சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் துவங்கினபோது தேவனுடைய வல்லமையும் மகிமையும் அவர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அது வேலைக்குச் சென்ற வியாபாரிகளை சற்று தங்களுடைய மேசையிலே அமரச்செய்து, ஒரு குழந்தையைப் போல அழுது, வியாபாரத்தை நிறுத்தும் அளவிற்கு செய்தது. விவசாயிகளும் வயலில் ஏர் உழும்படி கலப்பையின் மேல் உட்கார்ந்திருந்தபோது அவர்கள் தங்களுடைய வேலைகளை எல்லாம் நிறுத்தி கீழே இறங்கி ஒவ்வொருவரும் (மகத்தான பாவிகளும், தங்களுடைய கைகளை தேவனிடத்திற்கு நேராக உயர்த்தி, இரக்கத்திற்காக மன்றாடும்படி செய்தது. இதே போல் வீதிகளில் நடந்து கொண்டிருந்த மக்களுக்கும் மற்றும் எல்லா இடங்களிலும் அவ்வண்ணமே நடந்தது. எல்லாவிடத்திலும் சத்தங்கள் முழங்க ஆரம்பித்தன. நிச்சயமாகவே எழுப்புதல் உண்டாயிருந்தது. அது தான் அமெரிக்காவிற்கு இன்று தேவை. அதற்கு ஒரு பில்லி கிரஹாமோ அல்லது ஓரல் ராபட்ஸோ தேவையில்லை. பரிசுத்த ஆவியானவரே இன்றிரவு மக்கள் மத்தியில் அசைவாடி, விடுதலையின் வருடத்தை உரிமைகோருவதே அவசியமாயி ருக்கிறது. அது சரிதான். ஒரு புதிய ஸ்தாபனம் தேவையில்லை. ஒரு புதிய அமைப்பு துவங்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு தேவையெல்லாம் உணர்த்துதலின் வல்லமையோடே பரிசுத்த ஆவியானவர் வருவதே. நீ வயதாகும் வரை சுவிசேஷத்தை பிரசங்கிக்கலாம் அல்லது வயதாகும் வரை அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்யலாம். ஆனால் தேவன் மக்கள் மத்தியில் கடந்து வந்து அசைவாடினாலொழிய எந்த ஒரு மாற்றமும் நடைபெறாது. 27.ஓ, சொல்ல வேண்டுமென்றால், அந்த எழுப்புதல் துவங்கினபோது, ஒரு ஊழியக்காரர் வாய்க்காலுக்குக் குறுக்கே அமைந்துள்ள சிறு அடி பாலத்தின் மேலுள்ள சாலையண்டை வந்தபோது அவனுடைய குதிரையை நிறுத்திவிட்டு கீழே இறங்கி அந்த பாலத்தின்மேல் நின்று, "சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த நகரமானது முழுதும் மாசுபட்டதாய் இருக்கிறது. தேவரீர் இந்த பாலத்தை கடந்து செல்லுகிற ஒவ்வொரு புருஷனும், ஸ்திரீயும், பையனும், பெண்ணும் உம்முடைய ஆவியினால் உணர்த்தப்பட்டவர்களாகி விடுவார்களாக" என்று கேட்டுக் கொண்டார். அதன்பின் அவர் சென்று ஒரு விசுவாசமுள்ள வீரனை அழைத்து அவ்விடத்தில் இரவும் பகலும் உபவாசத்துடன் ஜெபிக்கும்படி அங்கேயே அவனை வைத்தார். பின்னர் அவர் நகரத்திற்குள் சென்று இரவு ஆகாரம் பரிமாறுவதற்கு முன்பாக அந்த உணவருந்தும் மேஜையண்டையிலே ஜெபம் செய்ய அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர்களும் அதற்கு சரி என்றனர். உடனே அவர் எழும்பி நின்று, "தேவனாகிய கர்த்தாவே இந்த மேசையில் உட்காருகிற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உணர்த்தப்படும்படி செய்யும்" என்றார். அதன் பின் செய்தித்தாள்களில் அந்தப் பாலத்தைக் கடந்து செல்லுகிற ஆண்கள் சாலையிலேயே தங்கள் குதிரைகளை நிறுத்திவிட்டு ஏங்கி அழ ஆரம்பிக்கின்றனர். மற்றும் மேசையண்டை உட்கார்ந்து தங்களுடைய உணவை பெற்ற ஆண்களும் பெண்களும் அதை தள்ளிவைத்து தேம்பி தேம்பி அழுது மனம் திரும்புகின்றனர்" என்று எழுதப்பட்டது. தேவன் அவ்விதமாய் தம்முடைய மக்களின் மத்தியிலே அசைவாடுகிற எழுப்புதலே இன்று நமது தேவையாயிருக்கிறது. 28.நாம் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்து அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பிக்கலாம். சில நேரங்களில் வெளி இடங்களிலே நடக்கின்ற கூட்டத்தில், குருடர்கள் பார்வையடைகிறார்கள். செவிடர்கள் கேட்கிறார்கள். இங்கேயும் அப்படி நடக்கிறதை கவனிக்கிறேன். அங்கு வருகிற மக்கள் அதைப் பார்த்து "ஓ அது மகத்தான காரியம்" என கூறுகிறார்கள். ஆனால் அந்த எழுப்புதலானது முடிவு பெற்றபின்பு, அவர்களைக் குறித்து நீங்கள் ஒருபோதும் கேள்விப்படுகிறதில்லை . "ஆம், நான் அதை விசுவாசிக்கிறேன்" என்று சொல்லுகிறவர்களே சரியாக பின் வாங்குகிறார்கள். ஆகவே அதற்கு இன்றைய தேவை ஒரு புதிய பிரசங்கி அல்ல. மக்கள் மத்தியில் பரிசுத்த ஆவியானவர் கடந்து சென்று, அவர்களைத் தட்டி எழுப்பி, நீதியினிமித்தம் பசி தாகத்தை உண்டு பண்ணுவதே அவசியமாயிருக்கிறது! ஏனெனில் "நீதியினிமித்தம் பசிதாகமாயிருப்பவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் நிரப்பப்படுவார்கள். ஆகவே எந்த இடமாக இருந்தாலும் சரி, அதைச் செய்வதற்கு பரிசுத்த ஆவியானவரே தேவை. 29.இப்பொழுது அன்றைய நாளிலே, ஆசாரியர்கள்.... ஒரு வேளை அந்நேரத்திலே, அந்த அடிமையானவன் சோளக் காட்டில் தன் மண் வெட்டியால் களைகளைக் கொத்திக் கொண்டிருக்கலாம். அப்போது அவனுடைய எஜமானன் அவனண்டை கடந்து வந்து, அவனை சாட்டையால் அடித்து, "சீக்கிரம் செய், இந்த வேலையை வேகமாய் முடிக்கவேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருக்கக்கூடும். ஆனால் அவன் எக்காளம் ஊதப்பட்ட அந்த நேரத்திலே, மண்வெட்டியை தூக்கி எறிந்து, "இனிமேல் நான் இனி இதைச் செய்யமாட்டேன்" என சொல்லலாம். அப்போது அவனை அடிமைத்தனத்திலே வைத்திருந்த அந்த ஆளோட்டி அவனை இனிமேலும் தொடுவதற்குத் தடை செய்யப்பட்டவனாய் இருக்கிறான். ஏனெனில் அவன் சுதந்திரத்தைப் பெற்றவனாய் இருக்கிறான். ஏன் தெரியுமா? அவன் நற்செய்தியைக் கேள்விப்பட்டான். யூபிலி துவங்கியிருந்தது. எல்லா அடிமைகளும் சுதந்திரமாய் போகும்படி பரிகாரம் செலுத்தப்பட்டாயிற்று! 30.ஓ நானும் அந்த நற்செய்தியை என்னுடைய இருதயத்திற்குள் கேள்விபட்டபோது, அது எப்பேற்பட்ட அற்புதம் என்று என்னால் நினைவுகூர முடிகிறது. என் சிறு வயதிலே, நான் ஒரு மோசமான பாவியாய் மருத்துவமனையின் படுக்கையிலே இருந்தபோது, "நீ வாழ்வதற்கு இன்னும் மூன்று நிமிடங்கள் மாத்திரமே உள்ளது" என்று மருத்துவர் சொல்வதைக் கேட்டேன். அப்போது அந்த நேரத்திலே பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி யூபிலி வருடம் துவங்கிற்று என்று சொல்லக்கேட்டேன். அப்போது நான் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொண்டு பாவத்தின் சங்கிலிகளிலிருந்து விடுபட்டவனாக சாத்தானை நோக்கி, "சாத்தானே, நீ இனிமேல் எனக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது. ஏனென்றால், நான் என் வாழ்க்கையை கிறிஸ்து இயேசுவிடம் கொடுத்துள்ளேன். நீ இனி என்னை ஒருபோதும் சாட்டையினால் அடிக்க முடியாது" என்று சொன்னேன். அது முதற்கொண்டு அவன் பலமுறை என்னை ஏமாற்ற முயற்சித்தான். ஆனால் அவனால் என்னைத் தொடமுடியவில்லை. ஏனெனில் அவன் வெறும் ஒரு பொய்யன் மாத்திரமே. அவனுடைய சாட்டையைக் கொண்டு 'சுளீர்' 'சுளீர்' என்று சத்தத்தை எழுப்புகிறான். அதை அடிக்கடி கேட்பேன். ஆனால் அதனால் எந்த பிரயோஜனமுமில்லை. நான் ஆண்டவருக்குச் சொந்தமானதால் அவனால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. அது உண்மை. 31.இப்பொழுது இந்த மனிதனை நாம் கவனிப்போமானால், அவன் சுதந்திரமாய் இருக்கும்படி விடுவிக்கப்பட்டவுடனே, அவன் தன்னுடைய அன்பான மனைவியினிடத்திற்குத் திரும்பிப்போக வேண்டும், தன் பிள்ளைகளிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டும். தன் வீட்டாரிடத்திற்குத் திரும்பிப் போக வேண்டும். ஏனெனில் அவன் விடுதலையானவன்! அவன் இனி யாருக்கும் அடிமையாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பரிதாபமான காரியம் என்னவென்றால், ஒரு மனிதன் போக மனதில்லாதவனாய் மீண்டும் அங்கேயே இருக்க விரும்புவானானால், அவனுடைய முதலாளி அவனிடம் சென்று,"நீஇன்னும் என்னுடைய அடிமையாக இருக்க விரும்புகிறாயா" என்று கேட்பான். அதற்கு அவன்,"ஆம்" என்று கூறுவானானால், அவனை ஆலயத்திற்குக் கூட்டிச்சென்று அதை மக்களுக்கு முன்பாக பொது சாட்சியாக அறிவிப்பார்கள். பிறகு அவனுடைய காதைநிலைக்காலின் மேல் வைத்து குத்தூசியைக் கொண்டு அவன் காதிலே ஒரு அடையாளக் குறியைப்போடுவார்கள். அதுமுதல் அவன் ஒருபோதும் விடுதலையாக முடியாது. அவன் ஜீவனோடு இருக்கும் காலம் மட்டும் ஒரு வேலைக்காரனாகவே இருக்க வேண்டும். ஆகவே, அவனுக்களிக்கப்பட்ட அழைப்பையும் மற்றும் விடுவிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் தருணத்தையும் அவன் எப்போது சுயமாய் தள்ளிப்போடுகிறானோ, அப்போதிலிருந்து அவன் ஜீவிய காலம் முழுவதும் அந்த ஆளோட்டியின் கீழ் தொடர்ந்து சேவை செய்ய வேண்டியவனாயிருக்கிறான். 32.இப்பொழுது இந்தக் காரியத்தைச் சற்று கவனமாகக் கேளுங்கள். கடந்த நாற்பது வருடங்களாக பரிசுத்த ஆவியானவர் அமெரிக்க ஐக்கிய தேசத்தில் தொடர்ந்து பலமாய் செயல்பட்டு, எல்லாவிதமான அற்புதங்களையும் அடையாளங்களையும் பொது மக்கள் மத்தியிலும், தனிப்பட்ட நபர்களிடையேயும் நடப்பித்து வருகிறார். வேசிகளும், முறைதவறிப் பிறந்தவர்களும் மற்றும் அது போன்றவர்களும் கொண்டுவரப்பட்டு, அவர்கள் கனவான்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் மாற்றப்பட்டனர். குருடர்கள் பார்வையடைந்தனர். செவிடருடைய காதுகள் திறக்கப்பட்டது. இதுபோன்று பிசாசினால் கட்டப்பட்டிருந்த வியாதியஸ்தருக்கும் பாதிக்கப்பட்டோ ருக்கும் ஒரு மகத்தான யூபிலியின் நேரமாய் இருந்தது. அவர்களின் நிலை எப்படி இருந்தாலும் சரி, ஒரு வேளை சுகவீனமாய் இருந்தாலும் அல்லது குருடராயிருந்தாலும் அல்லது முடமாயிருந்தாலும், அது போன்றவர்களி டையே ஆயிரமாயிரம் அற்புதங்கள் நடப்பிக்கப்பட்டது. இவ்விதமாகப் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தின் எழுப்புதலானது கடந்த நாற்பது ஆண்டுகளாக சபைகளிலே ஓயாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. ஆனால் நாமோ ஒரு சபைக் கூட்டமாக, ஒரு தனிப்பட்ட நபராக மற்றும் ஒட்டு மொத்த தேசமாக அதை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளி ஒதுக்கிவிடுகிற நேரத்திற்குள் வந்திருக்கி றோம். நாம் அதை நிராகரித்து கடந்து போனோம். 33.அதிலுள்ள மிகவும் மோசமான காரியம் என்னவென்றால், பரிசுத்த ஆவியை நீங்கள் அடிக்கடி துக்கப்படுத்தும்போது அந்த எல்லைக் கோட்டை தாண்டிப்போன வர்களாக இருக்கிறீர்கள். அப்போது மனந்திரும்புதலுக்கு இடமில்லாமல் இருக்கும் அந்த இடத்திற்குப் போய் அந்தகாரத்தின் ராஜ்ஜியத்திற்குள்ளாக முத்திரிக்கப்பட்டிருப்பீர்கள். அங்கே ஆண்டவராகிய இயேசுவை ஒருபோதும் காணமுடியாது. அங்கே வாழ்கைக்கான நம் பிக்கையை ஒருபோதும் காணமுடியாது. நீங்கள் என்றென்றைக்குமாய் வெளியிலே தள்ளப்பட்டவர்களாய் குறிக்கப்பட்டிருப் பீர்கள். ஓ, இது என்ன ஒரு சரியான எச்சரிக்கைபாருங்கள். பரிசுத்த ஆவியானவர் இதை உங்கள் இருதயத்தின் ஆழத்திற்குள் கொண்டு செல்வாராக. எல்லைக் கோட்டண்டை நிற்கிறவர்களே, "நான் முற்றிலும் அற்பணிக்கப்பட்ட கிறிஸ்தவனாகிட விரும்புகிறேன். ஆனால் நான் அதை எப்பொழுது செய்வேன் என்று என்னுடைய சிந்தையிலே முடிவு எடுக்கிறேனோ அப்பொழுது தான் செய்வேன்" என்று அநேக முறை சிந்தித்திருக்கிறீர்கள். ஓ, என் சகோதரனே சகோதரியே, நீங்கள் அவ்விதம் மாறுவதற்குஇதுவே உங்களுடைய கடைசி தருணமாய் இருக்கக் கூடும் என்பதை உணரமுடிகிறதா? நீங்கள் கிறிஸ்தவவிசுவாசிகளாவதற்கு இப்படிப்பட்ட ஒரு தருணம் இனிமேல் உங்களுக்கு கிடைக்கக் கூடாதபடி ஒருவேளை இதுவே உங்களுடைய கடைசி இரவாக இருக்கக்கூடும். ஒருவேளை இன்றிரவே நீதேவனுடைய செய்தியை கடைசி முறையாய் புறம்பே தள்ளுகிறவனாக இருக்கக்கூடும். அப்படி செய்யும்பட்சத்தில், நீ தேவனுடைய பார்வையிலே ஒரு விசுவாச துரோகியாய் காணப்படுவாய். 34.கடைசி காலத்தில் இரண்டு வகையானமக்கள் கூட்டத்தினர் இருப்பார்கள். அவர்கள் இருவருமே அடையாளத்தை பெற்றிருப்பார்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகமே தேவனுடைய அடையாளம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . அதைப் பற்றி சமீப காலத்தில் நான் இங்கு பிரசங்கித்திருக்கிறேன். பரிசுத்த ஆவியின் உதவியினாலும் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகமே தேவனுடைய முத்திரை என்பதை நிரூபித்தேன். எபேசியர் 4:30-ல் "அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவி இல்லாமல் முத்திரிக்கப்பட முடியாது. பரிசுத்த ஆவியே தேவனுடைய முத்திரை. அந்தப்படியே பரிசுத்த ஆவியினாலே முத்திரிக்கப்படாத யாவும் மிருகத்தின் முத்திரையை எடுத்துக்கொள்கிறது. பரிசுத்த ஆவியை தள்ளிப் போடுவதே விசுவாச துரோகம் என்று குறிக்கப்படுகிறது. அதுவே மிருகத்தின் முத்திரை. நான் சொல்வது புரிகிறதா? 35.ஆகவே யூபிலியின் வருடம் வரும்போது அல்லது அந்த பலத்த சத்தம் தொனிக்கும் போது மக்கள் பரிசுத்த ஆவியை ஏற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் நீ வேண்டுமென்றே ஏற்றுக் கொள்ளாமல் அதை தள்ளிப் போடுவாயானால், இனிமேல் தேவன் உன்னிடம் ஒருபோதுமே பேச வேண்டிய கட்டாயமில்லை. நீ பின்னர் புறம்பே தள்ளுண்டு போவதற்கு குறிக்கப்பட்டவனாக இருப்பாய். பழைய ஏற்பாட்டில் சம்பவங்கள் எல்லாம் புதிய ஏற்பாட்டிற்கு நிழலாட்டமாகவும் மாதிரிகளாகவும் இருக்கிறது. கிறிஸ்து உன் வாசலண்டை நின்று கதவை தட்டும்போது அவரை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிப்பாயானால், உன் காதுகள் நிலைக் காலிலே வைக்கப்பட்டு துவாரமிடப்படும் அபாய நிலையிலே இருக்கிறது என்று அர்த்தம். "விசுவாசம் தேவனுடைய வார்த்தையை கேட்பதினாலே வருகிறது''. ஆகவே நீ இனி அதை ஒரு போதும் புரிந்துக்கொள்ளக் கூடாதபடி தேவன் உன் காதுகளை அடைத்திடுவார். அதன் பின் நீ ஜீவிக்கும் காலமெல்லாம் சுவிசேஷத்தை குறை கூறுவதையே உன்னுடைய நோக்கமாக கொண்டிருப்பாய். அப்படியே நீ மரித்தும், என்றென்றும் இழக்கப்பட்டும் போவாய். ஆனால் அந்த கதவுகள் திறக்கப்படும்போது, அது எப்பேற்பட்ட நேரமாய் இருக்கும் என்று பாருங்கள். அதுவே யூபிலியின் நேரம். இதே பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் அதே காரியத்தை ...... 36.நான் சுகமளிக்கும் கூட்டங்களுக்கு முதல் ஸ்தானத்தை கொடுப்பதை கொஞ்சம் ஒதுக்கி வைத்து சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் நேரம் வரபோகிறது என்பதை அறிந்தவனாய், கடந்த நான்கு, ஐந்து அல்லது ஆறு வருடங்களாக பரிசுத்த ஆவியானவரைக் குறித்து சரித்திரத்திலே ஆராய்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். ஆகவே நான் முதலாவது செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால்... நீங்கள் ஏன் இதை செய்யக்கூடாது, ஏன் அதை செய்யக்கூடாது' என்று மக்கள் கேட்கிறார்கள். நான் தெய்வீக வரத்தைக் கொண்டு முதலாவது செய்ய வேண்டியது என்னவெனில், மக்களின் இருதயத்தை ஜெயிக்க வேண்டும். நான் அவர்களுடைய இருதயத்தை ஜெயிக்கவில்லை யென்றால் அவர்கள் எனக்கு செவிசாய்க்க மாட்டார்கள். ஆனால் தேவன் அதை இப்பொழுது ஊர்ஜிதப்படுத்தினார், மக்கள் என்னை விசுவாசிக்கிறார்கள். காரியங்கள் எவ்விதமாக இருக்கும் என்று சொல்லப்பட்டதோ, சொல்லப்பட்டபடி வார்த்தைக்கு வார்த்தை ஒவ்வொன்றாக நிறைவேறினதை மக்கள் கண்டிருக்கிறார்கள். தேவனுடைய வல்லமையானது கடந்து சென்று, சொல்லப்பட்டபடி கச்சிதமாக செய்வதை கண்டிருக்கிறார்கள். இப்பொழுது சொல்லுகிற எல்லாவற்றையும் அவர்கள் விசுவாசிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். ஆகவே நான் முதலாவது செய்யவேண்டியது என்னவென்றால், நான் எதைக் குறித்துப் பேசுகிறேனோ அதைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் நியாயத்தீர்ப்பின் நாளிலே தேவன் அதற்காக என்னை விசாரிப்பார். அது உண்மை . 37.இப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமானது பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு முதன் முறையாக ரஷ்யாவில் நூறு வருடங்களுக்கு முன்பாக வந்தது. அது உண்மை . சரித்திரம் அப்படித்தான் சொல்லுகிறது.அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை நூறு வருடங்களுக்கு முன்பாக பெற்றிருந்தார்கள். அற்புதங்களும் அடையா ளங்களும் நடந்தது. இருப்பினும் ஒரு தேசமாக அதை நிராகரித்து ஒதுக்கி தள்ளிவிட்டனர். அப்படி செய்ததினாலே அவர்கள் தேவனை எதிர்க்கிறவர்களாகவும், மார்க்கத்தை எதிர்க்கிறவர்களாகவும், மற்றும் உணர்வற்ற கொடுமையான இருதயமுடைய கம்யூனிஸ்ட்காரர்களாக இப்பொழுது மாறிப்போனார்கள். நீங்கள் தேவனுக்கு செவி சாய்க்காமல் போவீர்களானால் அவர் உங்களை குற்றம்சாட்டுகின்ற ஆவியினிடத்திற்கு ஒப்புக் கொடுப்பார். அப்போது நீங்கள் பொய்யை நம்பி கேடான சிந்தையுள்ளவர்களாக மாறி ஆக்கினைக்குள்ளாவீர்கள். அதுதான் ரஷ்யாவின் இன்றைய நிலை. அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகமாகிய இந்த யூபிலியின் செய்தியை ஏற்றுக்கொள்ள தவறினதினாலே, தேவனுடைய பார்வையில் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டிருக்கிறார்கள். கேடான சிந்தையுடைய வர்களானார்கள். பொய்யை நம்பி தேவனுடைய பார்வையில் ஆக்கினைக்குள் தீர்க்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்ததாக அது எங்கே வந்தது என்று பாருங்கள் துருக்கி தேசத்தின் மேலாய் வந்தது. துருக்கியர்களும் அதை நிராகரித்தனர். அவர்கள் ஆர்மேனிய மக்களை நூறு நூறு பேராக சிலுவையில் அறைந்தும், பெரிய தொட்டிகளில் தூக்கிப்போட்டும், பட்டயத்தினால் குத்தியும் மற்றும் இது போன்று அவர்களை கொன்றனர். துருக்கியின் நிலை இன்றிரவு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அவளையும் கடந்து போனார். 38.இப்பொழுது என் சகோதரனே, அமெரிக்கா, கடந்த நாற்பது வருடங்களாக இந்த பண்டைய கால யூபிலி வருடத்தின் அப்போஸ்தல பிரசங்கத்தை பெற்றிருக்கிறது. அமெரிக்கர்கள் இதை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ள வில்லையென்றால்; அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் போவார்களோ என பயப்படுகிறேன்; அப்போது வெளியே தள்ளப்பட்டு, முற்றிலும் விசுவாச துரோகத்தின் அந்தகாரத்திற்குள்ளாக முத்திரிக்கப் படுவார்கள். நாம் கொண்டிருக்கிற ஸ்தாபனங்கள் எல்லாம் சரிதான். ஆனால் சகோதரனே, தேவன் ஸ்தாபனங்களை நோக்கிப் பார்க்கவில்லை தனிப்பட்ட நபர்களையே நோக்கிப் பார்க்கிறார். கிறிஸ்தவம் என்பது ஒரு ஸ்தாபனம் அல்ல, கிறிஸ்தவம் என்பது ஒருதனிப்பட்ட நபர் ஜீவிக்கும் ஜீவியத்தைப் பொறுத்ததாயிருக்கிறது. ஆமென். இதோ, தேவனுடைய வார்த்தையின்படி பரிசுத்த ஆவியானவர் உரைக்கிறதாவது, ஓர் நாளிலே, அமெரிக்கா முழுவதுமாக தேவனை நிராகரித்து, வெளிப்படுத்தல்13- ம் அதிகாரத்தின்படி மிருகத்தின் முத்திரையை ஏற்றுக் கொள்ளும். நாம் சரியாக அந்த நிலைக்குத் தான் போய்க் கொண்டிருக்கிறோம். தேவன் எந்த ஒரு தேசத்தையும்... 39.தேவன் எந்த ஒரு தேசத்திற்காகவும் எந்த ஒரு மக்களுக்காகவும் முக்தாட்சண்ணியம் பார்க்கமாட்டார். 'அவரை விரும்புகிற யாவரையும்' அவர் ஏற்றுக்கொள்கிறார். ஏதாவது ஒரு தேசம் எழும்பி, இந்த எல்லாக் காரியத்தையும் செய்து அதிலே தரித்திருக்கும் என்றால், அதினுடைய ராஜ்யம் என்றென்றுமாய் நிற்கும். ஆனால் கைகளால் பெயர்க்கப்படாத கல்லானது மலையிலிருந்து பெயர்ந்து உருண்டு வரும் பொழுது, அது உலகத்திலுள்ள ஒவ்வொரு ராஜ்யத்தையும் உடைக்கும். அது எல்லா உலக ராஜியங்களையும் துண்டு துண்டாக உடைக்கும். அப்பொழுது கிறிஸ்து ராஜாவாக ஆளுகை செய்வார். அது முதல் அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது. "அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தர், சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா எனப்படும். கர்த்தத்துவம் (ஆளுகை) அவர் தோளின் மேல் இருக்கும்" ஆகவே அந்த ராஜ்யத்திற்கு முடிவிராது. அதுவே தேவன் வல்லமையிலும் முழு பெலத்தோடும் வர இருக்கிற ராஜ்யமாய் இருக்கிறது. அப்போது உலகத்தின் மற்றெல்லாக் காரியமும் உடைந்து நொறுங்கி சிதறுண்டுபோகும். அவர்கள் அதை நிராகரிக்கப் போகிறார்கள். தேசங்கள் அதை நிராகரிக்கும். சபைகள் அதை நிராகரிக்கும். தனிப்பட்ட நபர்கள் அதை நிராகரிப்பார்கள். அப்பொழுது மாத்திரமே தேவனால் தேசங்களை நியாயந்தீர்க்க முடியும். அப்பொழுது மாத்திரமே, அவரால் சபைகளை நியாயந்தீர்க்க முடியும். அப்பொழுது மாத்திரமே, அவரால் தனிப்பட்ட நபர்களை நியாயந்தீர்க்க முடியும். சத்தியத்தை கேட்டு அதிலே நடக்கத் தவறுகிற எந்த மனிதனும். வேதவாக்கியத்தின்படி, தேவனுடைய பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக தேவதூஷணம் உரைக்கிறவனாக இருக்கிறான். ஆகவே அதை நிராகரித்தபடியால் அவனுடைய மீட்பின் நாளை அவன் கடந்து போனவனாக இருக்கிறான். 40.நண்பர்களே நீங்கள் இங்கு வந்து இங்கே பெற்றுக் கொள்ளுகிற காரியங்கள் யாவும் .... நாம் இங்கே நல்ல அருமையான மிகச்சிறந்த உடைகளை உடுத்துகிறோம். சொல்லப்போனால், உலகிலேயே மிகச் சிறப்பாய் உடை உடுத்துகிறவர்கள் அமெரிக்கர்கள் தான். உலகத்திலே நன்றாக போஷிக்கப்படுபவர்களும் அமெரிக்கர்களே. மிகச்சிறந்த வாகனங்களை ஓட்டுகின்றவர்களும் அமெரிக்கர்களே. யாரைக்காட்டிலும் அவர்களிடமே அதிகப் பணம் இருக்கிறது. அது சரிதான். உலகத்திலுள்ள எல்லா சிறந்த காரியங்களையும் நாம் கொண்டிருக்கி றோம். உலகத்திலுள்ளவைகளிலேயே சில சிறந்த திருச்சபைகள் நம்மிடம் தான் இருக்கிறது. உலகத்திலுள்ளவைகளிலேயே சில சிறந்த மக்கள் நம்மிடையே இருக்கின்றனர். நாம் இவைகளெல்லாம் கொண்டிருந்த போதிலும், ஒரு தேசமாக நாம் முழுமையாய் தேவனை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாய் விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம். காரணம் என்னவென் றால் நாம் ஒரு தனிப்பட்ட நபர்களின் மேலாகச் சார்ந்துள்ளோம். ஸ்தாபனங்களின் மேல் சார்ந்துள்ளோம். தேசங்களின் மேல் சார்ந்துள்ளோம். 41.சமீப நாட்களில் நான் ஒருவரிடம் "நீர் கிறிஸ்தவரா", என்று கேட்டேன். அதற்கு அவர், "நீர் புரிந்துக் கொள்ளும்படி இதைச் சொல்லட்டும், நான் ஒரு அமெரிக்கன். நான் கிறிஸ்தவ தேசத்தைச் சேர்ந்தவன்" என்றார். நல்லது, அவையெல்லாம் அர்த்தமற்றது என்பதைத் தவிர வேறில்லை! மற்றும் ஒரு பெண்ணிடம் 'நீர் கிறிஸ்தவளா?' என்று கேட்டேன். அதற்கு அவள், "இங்கே பார் வாலிபனே! நான் ஒவ்வொரு இரவும் மெழுகுவர்த்தி ஏற்றுகிறேன், நீயே புரிந்துகொள்" என்றாள். நீங்கள் இத்தனை மெழுகுவர்த்தியை ஏற்றுகிறதற்கும் அதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? நீ இந்த தேசத்தில் வாழ்வதற்கும் அதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? நீ ஒரு குறிப்பிட்ட சபையைச் சேர்ந்திருக்கிறதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? "ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் பிறவாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்". இதுவே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் எச்சரிப்பின் செய்தியாக இருக்கிறது. 42.என் நண்பர்களே, நான் உங்களை எவ்வளவாக நேசிக்கிறேன் என்று உங்களுக்குத்தெரியாது. நீங்கள் ஒருபோதும் நான்... நான் இந்த பிரசங்க பீடத்தில் நிற்பதனால், இதை சாதகமாகக் கொண்டு உங்களைக் கடிந்துகொள்ள முயற்சிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். ஆனால் இந்த இரவிலே நான் உங்களுக்கு சொல்லுகிறது என்னவெனில்; சுவிசேஷத்தைக் குறித்து எச்சரிக்கையா யிருங்கள். கிறிஸ்துவிடம் சீக்கிரமாய் ஓடுங்கள்! எல்லாவற்றையும் புறம்பே தள்ளிவிடுங்கள். யாரோ ஒருவர் (ஜோன்ஸ்) துவங்குவதற்காக காத்திருக்காதீர்கள் சபையிலே துவங்குவதற்காக காத்திருக்காதீர்கள். இப்பொழுதே உங்களுக்குள்ளாக துவங்குங்கள். ஏனெனில் நீங்கள் எந்த பாவத்திற்குள் இவ்வளவு காலம் கட்டப்பட்டிருந்தீர்களோ, அதற்குள்ளாக, உங்களுடைய எஞ்சியிருக்கிற நாட்கள் முழுவதும் அடிமையாய் இருக்கும்படி தேவன் உங்களை ஒப்புக்கொடுக்கப்போகிற நேரம் வரப்போகிறது. ஆகவே எப்பேற்பட்ட கிரயம் செலுத்த வேண்டியதாய் இருந்தாலும் பரவாயில்லை! 43.சமீப நாட்களுக்கு முன்பாக, ஒருவர் என்னிடத்தில் வந்தார். அவர் மிகவும் உத்தமமுள்ளவராய் இருந்தார். ஆனால் அவருடைய ஜீவியமோ பாவத்தில்இருந்தது. அவர் "சகோதரன் பிரான்ஹாம், நான் உத்தமமுள்ளவன். நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்" என்றார். அதற்கு நான்,"நீ உத்தமனாயிருக்கிறாய் என்றால், உன் உத்தமத்தை நிரூபித்துக் காட்டும். உன் பாவத்தை விட்டுவிலகு" என்றேன். அதற்கு அவர், "ஓ, அது என்னோடு அவ்வளவு ஒன்றாகி விட்டது" என்றார். அதற்கு நான், 'நீர் உத்தமன் என்றல்லவா நினைத்தேன்" என்றேன். பாருங்கள், "நான் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டியிருந்தாலும் சரி, நீங்கள் மிக முக்கியமாய் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், இயேசு கிறிஸ்துவண்டை வருவதே. மறுபடியும் பிறத்தலைக்காட்டிலும் முக்கியமான காரியம் ஏதாவது உண்டோ ? 44.நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் நாளிலே இங்கிருக்கும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டு வெறும் மண்டை ஓடுகளாகவும் எலும்புக் குவியல்களாகவும் ஆகப் போகிறீர்கள் என்று அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் இங்கு அமர்ந்திருப்பது எவ்வளவு நிச்சயமோ அதைப் போலவே அங்கே அப்படியே ஆவதும் அவ்வளவு நிச்சயம். அது உண்மை. அப்படியென்றால், நீங்கள் எவ்வளவு உத்தமமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்? நான் சொல்வது புரிகிறதா? ஒருவேளை இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் உங்களுக்கு அப்படி நேரிட்டால், சரியாக அடுத்த வருடம், அடுத்த பன்னிரெண்டு மாதத்தில் இதே நேரத்தில் உங்களுடைய எலும்புகளிலே கொஞ்சம் சதை கூட இருக்காது. நீங்கள் மரித்த அடுத்த இருபத்தைந்து நிமிடத்திலே உங்களுடைய சரீரத்தில் ஒரு துளி ஜீவன் கூட இருக்காது. அது முதல் இந்த முடிவில்லா காலங்கள் முடிவடையும் வரைக்கும் கணக்குப் போட்டால், நீ ஒன்றுமே இல்லாமல் போவாய். ஆகவே நீ எந்த நிலைக்குள் போகிறாயோ, அதே நிலையிலே என்றென்றுமாயிருப்பாய். ஆகவே சகோதரனே, நீ வெதுவெதுப்பாய் இருப்பாய் என்றால் அதுதான் நீ இருக்கக் கூடியவைகளிலேயே மிகவும் மோசமான நிலை. வெதுவெதுப்பான நிலை மிகவும் மோசமானது. "ஒன்று நீ அனலாயிருக்க வேண்டும் அல்லது குளிராயிருக்க வேண்டும். ஒன்று நீ என் பக்கமாக இருந்தால் உன் முழு இருதயத்தோடு இரு. இல்லையெனில் எனக்கு எதிராயிரு" என்று இயேசு சொன்னார். நீ வெறும் நல்ல ஜீவியத்தை மாத்திரம் ஜீவிப்பாயானால் அது ஒருபோதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. உன் சுயநிதியின் கந்தைகளைக் கொண்டு ஒருபோதும் நியாயத்தீர்ப்பின் நாளிலே நிற்க முடியாது. அது சரியே. 45.சகோதரனே "நல்லது, நான் இந்த குறிப்பிட்ட சபையை சார்ந்தவன்" என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் ஒரு சபையை சேர்ந்தவர்களாய் இருக்க வேண்டும் என்று விசுவாசிக்கிறவன் நான். அது பரவாயில்லை. ஆனால் இரட்சிப்புக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இந்த காலையில் சொன்ன பிரகாரமாக, ஒரு மனிதன் இயேசுவைக் கண்டுக்கொள்ள எல்லா இடத்திற்கும் போனான். ஆனால் அவரோ ஏற்கனவே அவனுடைய இருதயத்தில் இருந்தார். அவன் கத்தினது, அந்நிய பாஷையில் பேசினது அது போன்ற காரியங்கள் எல்லாம் சரிதான். ஆனால் அவைகள் எல்லாம் கிறிஸ்துவின் தன்மைகளாக அவனுக்குள் முதலில் இருந்தது. பாருங்கள்! நீங்கள் முதலாவது கிறிஸ்துவை பெற்றுக்கொள்ள வேண்டும். மற்றவை எல்லாம் தானாக நடைபெறும். கிறிஸ்து இல்லாமலும் நீங்கள் இவைகளைச் செய்யலாம். அப்படிச்செய்யும் பட்சத்தில், நீங்கள் எதற்குள்ளாக சிக்கப்பட்டீர்கள் என்று பாருங்கள். 46.நான் அஞ்ஞானிகள் கூச்சல் போடுவதைக் கண்டிருக்கிறேன். அது சரிதான். மக்கள் வீதிகளிலே சுற்றித்திரிந்து பார்ப்பதற்கு வேடிக்கையான காரியங்கள் செய்வதை கண்டிருக்கிறேன். அவர்கள் செய்கிறதை எல்லாம் நீங்கள் நம்புகிற அளவிற்கு பிரமாதமாக செய்வார்கள். கோணியிலிருந்து ஒரு கயிற்றை தூக்கி எறிந்து மந்திர தந்திரத்தை செய்வார்கள். உடனே அது காற்றிலே செங்குத்தாய் நிற்கும். பிறகு ஒரு பெரிய நாகப் பாம்பை தூக்கிப் போடுவார்கள். அது கொத்தவரும் (அதற்கு விஷத்தை பீச்சகூடிய பற்கள் இருக்கிறதோ இல்லையோ என்று தெரியாது) உடனே ஒரு கந்தையை அதன் மேல் தூக்கிப் போடுவார்கள். அப்போது அதன் பற்கள் அந்த கந்தையிலே மாட்டிக் கொண்டிருப்பதை பார்க்கமுடியும். பின்னர் அந்த பாம்பாட்டி அதன் பக்கத்தில் சென்று அதின் மேலாக மந்திரத்தை ஓதி அதை அப்படியே அவனுடைய கழுத்திலே சுற்றுவான். அப்போது அந்த நாகப் பாம்பு, படம் எடுத்து அவனை உற்றுப்பார்க்கும். அவனை கொத்திவிடுவது போல செய்யும், ஆனால் கொத்தாது. நீங்கள் அதற்குகிட்டப் போவீர்களானால் அது உங்களை கொன்றுவிடும். மற்றும் அடுப்புக்கரிகளை எரியவிட்டு, அந்த நெருப்பு மீது மக்கள் நடந்து போவதை (தீமிதிப்பதை கண்டிருக்கிறேன். அவர்களுடைய காலணிகளைக் கழற்றி வெறும் கால்களில் அந்த நெருப்புகளின் மேல் நடப்பார்கள். அது அவர்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. மற்றும் ஒரு பெரிய பெட்டிக்குள் கண்ணாடிகளை உடைத்து, அந்த கண்ணாடியினுடைய துண்டுகள் நேராய் இருந்தும், அதன் மேலே ஓடி எகிரி குதித்து, உருண்டு புரண்டு தொடர்ந்து அப்படியாகச் செய்து எழும்புவார்கள். இருப்பினும் அவர்கள் மேலே ஒரு சிறு வெட்டும் ஏற்படுவதில்லை. சகோதரனே அது விசுவாசம் தான் ஆனால் அது இரட்சிப்பு அல்ல. இல்லை ஐயா. பிசாசானவன் மிக தந்திரமாய் மக்களை ஏமாற்றுகிறான். 47.இரட்சிப்பு என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் சர்வவல்லமையுள்ள தேவனோடு நமக்கு உண்டாகிற தனிப்பட்ட உறவாக இருக்கிறது. ஓ நண்பர்களே இன்றிரவு நமக்குத் தேவை எல்லாம் நம்முடைய தேசத்தை முழுவதும் அசைக்கக்கூடிய அந்த பண்டைய காலகூட்டங்களில் ஒன்று மாத்திரமே. ஓ, அந்த மக்கள், அவர்களுடைய வீடுகளுக்குக் கடந்து சென்ற பின்னர், வீட்டில் இருந்த எல்லா பொல்லாங்கான காரியங்களையும் தூக்கி எறிந்து, வீட்டிலுள்ள புத்திக் கெட்டகாரியங்கள் எல்லாவற்றையும் நிறுத்தி வீட்டை ஒழுங்கிலே வைத்தனர். ஒவ்வொருவீட்டினரும் தங்கள் வீட்டை ஒழுங்கிலே வைத்திருந்தனர். அவர்கள் திருட்டுத்தனமுள்ள குணாதிசயத்தை விட்டுவிட்டனர். ஏமாற்றுதலை கைவிட்டனர். பொய்யை விட்டொழிந்தனர். ஒருவரோடொருவர் நேர்த்தியாகவும் உத்தமத்தோடும் கிறிஸ்தவர்கள் எவ்விதமாக ஜீவிக்கவேண்டுமோ அப்படியாக ஜீவித்தார்கள். அவ்விதமான மார்க்கத்தைத்தான் நாம் கொண்டிருக்க வேண்டும். 48.ஆனால் இன்றைக்கு நாம் கொண்டிருக்கிற அதே மார்க்கமானது, காலத்தின் ஓட்டத்தில் முளைத்து, கிளைகளை பிறபித்து பிறப்பித்து, இப்பொழுது கிட்டத்தட்ட ஆலிவுட் படத்தின் பாணியைப் போல் காட்சியளிக்கும் அளவிற்கு மாறியிருக்கிறது. அது உண்மை என்று அறிந்திருக்கிறீர்கள். உதாரணத்திற்கு, நாம் ஒரு இடத்திற்குச் சென்று அங்கே பெரிய இசை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து இசையை வாசித்து கிறிஸ்தவர்களைப் போலநடித்து காண்பித்துக் கொள்கிறோம். ஆனால் ஒரே ஒருமுறை அவர்களை குறுக்கிட்டு கேள்வி கேட்டுப் பாருங்கள் அப்பொழுது தெரியும் என்ன நடக்கிறது என்று. புரிகிறதா? கிறிஸ்தவம் என்றால் நீடியபொறுமை, நற்குணம், சாந்தம், தயவு மற்றும் கண்ணியமே. அதுசரிதானே? கிறிஸ்து நிந்திக்கப்பட்டபோது அவர் பதிலுக்கு நிந்திக்கவில்லை. அது சரிதானே? கிறிஸ்தவம் என்பது ஒரு மனிதன் வாழும் வாழ்கையை குறித்ததாய் இருக்கிறது. அது ஒரு தனிப்பட்ட அனுபவமாய் இருக்கிறது. இவ்விதமாக..... சிலர், "சகோதரனே, அந்த நபரா. அவர் செய்வதை நான் அறிந்திருக்கிறேன். அவர் வியாதியஸ்த ருக்கு ஜெபிக்கும் போது அவர்கள் குணமடைகிறார்கள்" என்று சொல்லுகி றார்கள். அப்படி செய்வதினாலே அவர் ஒரு கிறிஸ்தவன் என்று அர்த்தமாகாது. விசுவாசமானது எதையும் செய்யக் கூடியது. இங்கு நம்முடைய கூடாரத்திலிருக்கும் மக்களாகிய நீங்கள் மாத்திரம் கிறிஸ்தவர்கள் என்ற நிலைக்கு வருவீர்களானால்... 49.மந்திரவாதிகளும் மாயக்காரிகளும் எப்படி அற்புதங்களை செய்கின்றனர் என்பதை மாத்திரம் பார்ப்பீர்களானால்.... அவர்கள் நிச்சயம் அப்படி செய்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவத்தினால் உண்டாகும் சகல காரியங்களையும் செயல்படுத்திக் காண்பிக்கிறார்கள். அப்படி செய்கிறதினால் அவர்கள் கிறிஸ்தவர்களாகி விட முடியாது. அவர்களுடைய ஜீவியத்தைக் கவனித்துப் பாருங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனியுங்கள். மற்ற பெண்களோடு வாழ்ந்து விபச்சாரத்தை மதமாக கொண்டிருக்கிற மக்களும், அற்புதங்களையும் அடையாளங் களையும் செய்கின்றனர். ஆனால் அவர்களால் செய்ய முடியாத ஒரு காரியம் உண்டு. நான் பார்த்ததில், இதுவரை இந்த ஒரு காரியத்தை மாத்திரம் மந்திரவாதிகள் அல்லது எவரும் செய்ததாக கண்டதில்லை. அவர்களால் கயிற்றை ஆகாயத்திலே நேராக நிற்கவைத்து அற்புதங்களை செய்ய முடியும். அவர்களால் நெருப்பின்மேல் மாயவித்தை செய்து அதின் மேல் ஓடமுடியும். அப்படிப்பட்ட காரியங்களை அவர்களால் செய்ய முடியும். ஆனால் அவர்களால் மக்களை சுகப்படுத்த முடியாது. அது அவர்களுக்கு விசித்திரமானது. அவர்களால் மக்கள் மேல் சாபத்தை கொண்டு வந்து நோய்களைக் கொண்டு வரமுடியும். ஆனால் அவர்களால் சாபத்தை நீக்கி அவர்களை சுகப்படுத்த முடியாது. 50.அவ்விதமாகத் தான் வேதாகமத்தின் நாட்களிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்கொண்டபோது அவர்களால் கொப்பளங்களையும் கட்டிகளையும் கொண்டுவர முடிந்தது. ஆனால் அதை எடுத்துப் போட முடியவில்லை. அவர்களால் பேன்களையும், ஈக்களையும் கொண்டு வர முடிந்தது. ஆனால் அதை எடுத்துப்போட முடியவில்லை. ஏனெனில் வியாதியஸ்தர்களை சுகமாக்கக் கூடியவர் தேவன் ஒருவர் மாத்திரமே. அவர்களால் ஆவியில் நிரம்பி ஆட முடியும். அதை அனேக முறை பார்த்திருக்கிறேன். அவர்களால் எல்லாவிதமான தந்திரத்தையும் செய்ய முடியும். ஆனால் வியாதியஸ்தரை சுகப்படுத்த முடியாது அல்லது அவர்களால் கிறிஸ்தவ ஜீவியத்தை ஜீவிக்க முடியாது. அந்த ஒரு காரியத்தை அவர்களால் செய்யமுடியாது. ஆகவே இது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட காரியமாய் இருக்கிறது. நாம் இந்த பொய்யான காரியங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது, வேதம் உரைத்தபடி "கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கதக்க அளவிற்கு அவ்விரு ஆவிகளும் கடைசி நாட்களிலே ஒரே மாதிரி தோற்றமளிக்கும்" என்பது சரியாக உள்ளது. "கள்ள கிறிஸ்துக்களும், கள்ள ஆவிகளும் எழும்பி அடையாளங்களைக் காண்பித்து அநேகரை வஞ்சிப்பார்கள் என்பது சரியே. அதே நேரத்தில், "என்ஆடுகள் என் சத்தத்தை அறியும். அவை அந்நியனை பின் தொடராது" என்றும் உரைக்கப்பட்டிருக்கிறது. ஓ நாம் ஜீவிக்கின்ற நாள் மிகவும் மகத்தான நாள். இன்னும் சீக்கிரத்தில் யூபிலியின் நேரம் முடிவடையப் போகிறது. 51.நண்பனே இதை கவனி. நீ கிறிஸ்துவை பெறாதவனாய் இருப்பாயானால் மற்றும் அவரை அறியாதவனாய் இருப்பாயானால்... கிறிஸ்து உன்னுடைய இருதயத்தில் இருக்கிறார் என்பதை கொஞ்சம் கூட சந்தேகத்தின் நிழல் இல்லாதபடி நிச்சயமுடையவனாக இரு, அதைக் குறித்து ஆக்கப்பூர்வமாய் இரு. "சகோதரன் பிரான்ஹாம், ஒரு சமயம் நான் மனமுடைந்து பலிபீடத்தண்டையில் கதறியழு திருக்கிறேன்" என்று சொல்லலாம். ஆனால் அதை எடுத்துக்கொள்ளாதே. அல்லது, "சகோதரன் பிரான்ஹாம், ஒரு சமயம் நான் ஆவியில் நிரம்பி அவ்விடத்தை முழுவதும் சுற்றி நடனமாடி ஒரு நல்ல அனுபவத்தைக் கொண்டிருந்தேன்" என்று கூறலாம். அதையும் எடுத்துக் கொள்ளாதே. புரிகிறதா? அல்லது, "நான் ஒரு முறை ஒரு மனிதனுக்காக ஜெபித்தேன், அவன் சொஸ்தமானான்" என்று கூறலாம். அதையும் எடுத்துக்கொள்ளாதே. நீ எடுத்துக்கொள்ளக் கூடிய ஒரே விஷயம் என்னவென்றால், உன் மேல் அதிகமான துன்பங்களும் சோதனைகளும் வரும் போது, கிறிஸ்து உன்னுடைய இருதயத்தில் இன்னும் இனிமையானவராகவே இருக்கிறாரா என்பதே. அப்போது உன்னுடைய நடக்கையிலே எந்த மாற்றமும் இராது. எல்லா காரியங்களும் தவறாகப் போனாலும், எல்லோரும் உனக்கெதிராய் நின்றாலும், சகலமும் உனக்கு மாறாக நடந்தாலும், நீ இன்னும் அருமையானவனாய் இனிமையான நபராகவே இருப்பாய். அதெல்லாம் பரவாயில்லை என்று சொல்லி முன்னோக்கிக் கடந்துபோய்க் கொண்டிருப்பாய். மேலும், நீ தேவனுடைய குமாரனும் குமாரத்தியுமாய் இருக்கிறாய் என் பதை உன்னுடைய ஆவி தேவனுடைய ஆவியோடு சேர்ந்து சாட்சி பகரும். ஓ, நண்பனே, இன்றிரவு, இதுமாத்திரம் உன்னுடைய ஆத்துமாவுக்குள் எதிரொலிக்கவில்லை என்றால்... நாம் தேவனுடைய ராஜ்யத்திலிருந்து புறம்பே இருக்கும்படி முத்திரிக்கப் பட்டவர்களாய் இருந்துவிடுவோம். ஆகவே நாம் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்போமாக! ஒரு மனிதன் எப்பொழுது தேவனுடைய ராஜியத்திற்கென்று முத்திரிக்கப்படு கிறானோ அப்போது அவன் அவனுடைய பிரயாணம் முடிவு மட்டுமாக முத்திரிக்கப்பட்டவனாக இருக்கிறான். அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்". 52.இப்பொழுது நாம் பண்டைய கால வழக்கமாகிய பலிபீட அழைப்பை கொடுத்து மக்களை பலிபீடத்தண்டை கொண்டு வருகிறோம். அதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். அது மெத்தோடிஸ்ட் சபையினால் அநேக வருடங்களுக்கு முன்பாக கொண்டுவரப்பட்ட ஒரு அருமையான பண்டைய கால முறைமையாக இருக்கிறது. அது அன்றைக்கு எப்படி நன்றாக இருந்ததோ அதேபோல் இன்றைக்கும் நன்றாகவே இருக்கிறது. ஆனால், ஒரு கிறிஸ்தவனாவதற்கு நீ பலிபீடத்தண்டை வரவேண்டிய அவசியம் இல்லை . வேதாகமத்தின் காலத்திலே அவர்கள் ஒருபோதும் அப்படியெல்லாம் கொண்டிருக்கவில்லை. அவர்களை விசுவாசிகளாகவே எண்ணிக்கொண்டார் கள். அப்போஸ்தலர்களின் காலத்திலே, அவர்கள் ஒருபோதும் எந்த நேரத்திலும் பலிபீட அழைப்பை கொடுத்ததில்லை. பலிபீட அழைப்பு என்ற ஒன்று அங்கே இருந்ததேயில்லை. விசுவாசித்தவர்கள் எத்தனை பேர்களோ அத்தனைபேரும் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்றே சொன்னார்கள். அது சரிதானே? அவர்கள் முதலாவது விசுவாசிகளானார்கள். 53.நீங்கள் எப்பொழுது இயேசு கிறிஸ்துவே தேவனுடைய குமாரன் என்று உங்கள் இருதயத்தில் முழுவதுமாக உறுதி கொண்டிருக்கிறீர்ளோ, (உங்கள் கற்பனையில் அல்ல, ஆனால் உங்கள் இருதயத்தில் உறுதிபடும்போதும் அப்பொழுது உங்களுக்குள்ளாக ஏதோ ஒன்று, "நான் இப்பொழுது இரட்சிக்கப்பட் டேன்" என்று எதிரொலித்துக் கொண்டே இருக்கும். சகோதரனே, உனக்கு தேவையெல்லாம் அதுதான் அப்படியே அதை அறிக்கை செய்யுங்கள். உங்களுடைய வாயிலிருந்து அந்த வார்த்தைகள் புறப்பட்டு வரட்டும். அதன் பிறகு உங்களுடைய ஜீவியம் எப்படி இருக்கிறது என்று கவனித்துப் பாருங்கள். சோளமானது எப்படி முட்செடியை பிறப்பிக்காதோ அதேபோல் அப்படிப்பட்ட மனிதனாலும் தீமையான கனிகளை பிறப்பிக்க முடியாது. அவன் நன்மையான கனிகளையே பிறப்பித்தாக வேண்டும். "என் வார்த்தைகளுக்கு செவிகொடுத்து என்னை அனுப்பினவரை விசுவாசிக் கிறவன் எவனோ அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினை தீர்ப்புக்குட்படா மல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்" என்று இயேசு சொன்னார். உங்களுடைய விசுவாசத்தி னால் மாத்திரமே இவைகளைப் பெறுகிறீர்கள். கற்பனை செய்கிறதினால் அல்ல, விசுவாசத்தினாலேயே இவைகளை பெற்றுக் கொள்கிறீர்கள். அது உங்களுடைய இருதயத்தின் எண்ணமாக மாறுகிறது. பின்னர் நீங்கள் அதை அறிக்கையாக வெளிப்படுத்தினீர்கள். "மனுஷர் முன்பாக என்னை அறிக்கை செய்கிறவர்களை நான் என் பிதாவிடமும் பரிசுத்த தூதர்கள் முன்பாகவும் அறிக்கைசெய்வேன்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே நீங்கள் அப்படி செய்யும் பட்சத்தில், ஏதோ ஒன்று நங்கூரமிடப்படுகிறது. அது உண்மை. 54.ஆனால் நண்பர்களே, நமக்கு போதிக்கப்பட்ட காரியங்களே நம்மை அந்த ஒழுங்கிலிருந்து வழி விலகச் செய்யும்படி செய்திருக்கிறது. மெத்தொடிஸ்டு மக்களினால் ஆதியிலே "சகோதரனே, மக்கள் எப்பொழுது கத்தி கூச்சலிடுகிற நிலைக்கு வருகிறார்களோ அப்பொழுதே அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டார்கள். அவ்வளவுதான் அவர்கள் எல்லாவற் றையும் அடைந்து விட்டார்கள்" என்று போதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் அது அந்த அளவிற்கு கிரியை செய்யவில்லை என்று பின்னரே அறிந்து கொண்டிருக்கிறீர்கள். அது சரியே! நசரேயர்களும் அப்படியாக கத்தி, தங்கள் கரங்களை உயர்த்தி சபைக்குள் உள்ள நடை பாதையில் முன்னும் பின்னுமாக ஓடினபோது, "ஓ, இது தான் அது" என்றனர். ஆனால் அப்படி கத்தி நடைபாதையில் முன்னும் பின்னுமாக ஓடினவர்களில் அனேகர் வெளியிலே சென்று தாறுமாறான ஜீவியத்தை ஜீவித்தபோது, ஓ இதுவல்ல அந்த காரியம் என்று அறிந்துக் கொண்டனர். அதன் பிறகு பெந்தகோஸ்தே வந்தபோது, தேவன் வரங்களை சபைக்கு திரும்ப அளித்திருந்தார். அப்போது மக்கள் அந்நிய பாஷையில் பேச ஆரம்பித்தனர். உடனே அவர்கள் அவ்வளவு தான் நமக்கு அது கிடைத்தாயிற்று. நாம் தயாராகிவிட்டோம்" என்றனர். ஆனால் அவர்கள் அதைப் பெறவில்லை என்பதை பின்னரே அறிந்தனர். அது சரியே. மக்கள் அந்நிய பாஷையில் பேசிக்கொண்டிருந் தாலும் தாறுமாறாகவே ஜீவித்துக் கொண்டிருக்கின்றனர். 55.சகோதரனே, அது என்ன என்பதைக் குறித்து நீநிச்சயமுடையவனாயிரு. இப்பொழுது உரக்க சத்தமிடுதல் எல்லாம் சரிதான். பரிசுத்தமாகுதலை விசுவாசிக்கிறவன் நான் ஆம் ஐயா. ஆனால் என்னுடைய பரிசுத்தத்தை அல்ல அவருடையதையே விசுவாசிக்கிறேன். புரிகிறதா? அது சரிதான். என்னுடைய பரிசுத்தத்தை அல்ல, அவருடைய பரிசுத்தத்தையே. பரிசுத்த ஆவியாகிய அவர், தன்னுடைய பரிசுத்தத்தை எனக்குள்வைக்கும் போது அது என்னுடையதல்ல, அது அவருடைய பரிசுத்தமே. நான் ஒரு பாவி. ஆனால் அவர் ஆண்டவர். இப்பொழுது, நான் பரிசுத்தமாகுதலைக் குறித்து விசுவாசிக்கிறேன். உரக்க சத்தமிடுதலையும் விசுவாசிக்கிறேன், நிச்சயமாகவே மறுபடியும் பிறந்த மனிதன் இவ்விதமான கிரியைகளில் ஏதாவது ஒன்றை வெளிப்படுத்துவான் என விசுவாசிக்கிறேன். அது சரிதான். நான் அந்நிய பாஷையில் பேசுவதை நம்புகிற வன். அந்நியபாஷைக்கு வியாக்கியானம் தருவதையும் விசுவாசிக்கிறேன். வியாதியஸ்தர் சுகமாகுதலை விசுவாசிக்கிறேன். அற்புதங்கள் நடைபெறுகிறதை விசுவாசிக் கிறேன். ஆனால் இவையெல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பிறகு பின் தொடரக்கூடிய காரியங்கள். 56.ஆனால் நாம் என்ன சொல்ல எத்தனிக்கிறோம் என்றால், "அவன் கத்தின்போது, அதை பெற்றுக் கொண்டான். அவன் தீர்க்கதரிசனம் உரைத்தபோது, அதை பெற்றுக் கொண்டான்" என்று சொல்லுகிறோம். ஆனால் அவன் பெற்றுக் கொண்டது அதுவல்ல. நீங்கள் ஒரு ஆப்பிள் மரத்திலிருந்து ஒரே ஒரு ஆப்பிள் பழத்தை எடுக்கும்போது அந்த மரத்தையே நீங்கள் பெற்றதாக அர்த்தமாகாது. புரிகிறதா? நீங்கள் பெற்றுக் கொண்டது, அந்த மரத்தின் ஒரு தன்மை மாத்திரமே. அது தான் தொல்லைக்கு காரணமாயிற்று. ஆனால் ஒருமுறை கிறிஸ்து உன்னுடைய இருதயத்திலே உறுதிகொண்டிருக்கும் போது, மற்ற காரியம் எல்லாம் தானாகவே நடைபெறும். இது வர இருக்கிற இந்த குளிர்காலத்தைப் போல் இருக்கிறது. இந்த நேரத்திலே, கருவாலிமரத்தை தவிர மற்றெல்லா மரமும் இலையை உதிரபண்ணும். அது மட்டும் இலைகள் விழாதபடி பிடித்து வைத்திருக்கும். ஆனால் வசந்தகாலம் வரும்போது எல்லா இலைகளும் செத்துப்போன இலைகளாக மரத்திலே தொங்கிக் கொண்டிருக்கும். புதிய இலைகள் முளைப்பதற்காக நீங்கள் அங்கே சென்று அந்த பழைய இலைகளை கிள்ள வேண்டிய அவசியம் இல்லை. புதிய ஜீவன் வரட்டும், அப்பொழுது பழைய இலைகள் தானாக கீழே விழுந்து புதிய இலைகள் முளைத்து எழும்பும். 57.கிறிஸ்தவமும் அதே மாதிரிதான் இருக்கிறது. நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்காக, நீங்கள் ஒன்றும் ... மக்கள் இப்படியாக சொல்லுவதை கேட்டிருக்கிறேன், "நல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் ஒரு காலத்தில் சாப வார்த்தைகளை பேசினேன். மக்கள் தங்கள் தலையிலிருக்கிற தொப்பியை கழற்றுகிற அளவிற்கு சாப வார்த்தைகளை பேசினேன். நான் இப்பொழுது அப்படி பேசுவதை விட்டுவிட்டேன். நான் ஒரு கிறிஸ்தவன் என்று அறிவேன்" என்று சொல்லுகிறார்கள். இல்லை ஐயா. "ஒரு சமயம் நான் குடிப் பழக்கத்தில் இருந்தேன். இப்பொழுதோ அதை விட்டுவிட்டேன். அது நல்ல விஷயம்தான். ஆனால் நீ அப்படி நிறுத்தினது ஒரு நன்னடத்தையான காரியமாக இருக்கிறது. ஆனால் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது அவரை (அந்த நபரை) உங்களுடைய இருதயத்தில் ஏற்றுக்கொள்வதாகும். அது உலகத்தின் காரியங்களுக்கு உங்களை மரிக்க செய்து கிறிஸ்துவை உங்களுக்குள்ளாய் ஜீவிக்க செய்யும். புரிகிறதா? நீங்கள் முற்றிலும் குடி பழக்கத்தைவிட்டிருந்தும் இன்னும் கிறிஸ்தவர்கள் ஆகாமல் இருக்கலாம். நீங்கள் பத்து கட்டளைகளை முழுமையாய் கடைபிடித்திருந்தும் இன்னும் கிறிஸ்தவராக இல்லாமலிருக்கலாம். பாருங்கள், பத்து கட்டளைகளால் உங்களை இரட்சிக்கக்கூடுமானால், இயேசு மரிக்க வேண்டிய அவசியமிருக்காது. இயேசுவோ உனக்கு நித்திய ஜீவனளிப்பதற்காக மரித்தார். ஆகவே பரிசுத்த ஆவியானவர் உனக்குள்ளாக ஜீவிப்பது தான் காரியம்; மாறாக இதை செய்வதோ அல்லது அதை செய்வதோ அல்லது நியாயபிரமாணத்தை கைக் கொள்வதோ அல்ல. அவையெல்லாம் கிரியைகளாய் இருக்கிறது. "நீங்கள் கிரியையினாலே இரட்சிக்கப்படாமல் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்". 58.நீ உன்னுடைய இருதயத்தில் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொள்ளும் போது அவருடன் ஒப்புரவாகி சமாதானத்தோடு இருப்பாய். உன்னுடைய பின்னான வாழ்க்கையை கொஞ்சம் நினைத்துப் பார். நான் எப்படிப்பட்ட கிறிஸ்தவர்களை பார்க்க விரும்புகிறேன் தெரியுமா. அவர்கள் தெருவிலே நடந்து போகும்போது, மக்கள் அவர்களை பார்த்து, "இதோ அங்கே நடந்து செல்லுகிற நபரை தெரிகிறதா, அவன் ஒரு கிறிஸ்தவன். நான் அவனுடைய சபையை சேர்ந்தவன் அல்ல. ஆனால் சகோதரனே அவன் ஒரு கிறிஸ்தவன் என்று நான் அறிவேன். அவனை கஷ்டமான சூழ் நிலையிலும் பார்த்திருக்கிறேன். அதோ அந்த ஸ்திரீயை பார்த்தாயா? ஆம் ஐயா. அவள் ஒருவேளை பார்ப்பதற்கு ஸ்திரீகளுக்குள்ளே பிரசித்தி பெற்றவளாய் இல்லாமல் இருக்கக் கூடும். ஆனாலும் அவள் ஒரு கிறிஸ்தவள். அவள் நிச்சயமாகவே ஒரு கிறிஸ்தவள் என்று உனக்கு சொல்லட்டும்" என்று சொல்லுவதையே. இவ்விதமாக முழு பட்டிணமும் "அதோ அங்கே ஒரு கிறிஸ்தவன்" என்று கூறட்டும். நிச்சயமாகவே அவர்கள் அறியப்படுவார்கள். ஏனெனில் வேதாகமம் நீங்கள் முத்திரிக்கப்பட்டவர்கள் என கூறிற்று. 59.நீங்கள் எதின் மேலாவது முத்திரையை போட்ட அனுபவம் உண்டா? அவர்கள் அதை எடுத்து அழுத்தி முத்திரை போடும்போது, அதனுடைய பதிவு இரு பக்கமும் தெரியும். அவர்கள் நீ வருகிறதையும் பார்க்கிறார்கள் போகிறதையும் பார்க்கிறார்கள். சரிதானே? ஏனெனில், நீங்கள் உள்ளும் புறமும் கிறிஸ்தவர்களாக தேவனுடைய ஆவியினாலே முத்திரிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆகையால் தான் நீங்கள் யார் என்பதை அவர்களால் அறிந்துக் கொள்ள முடிகிறது. அது சரியே. அது நன்றாக அழுத்தப்பட்டு குறிக்கப்பட்டு முத்திரிக்கப்பட்டிருக்கிறது என்று காட்டுகிறது. அது முற்றிலும் உண்மையே. அப்பொழுது தான் நீங்கள் தேவனுடைய ராஜியத்திற்குள் முத்திரிக்கப்பட்டவர்களா யிருக்கிறீர்கள். ஒரு காகிதம் எப்பொழுது சான்றுறுதி வழங்கும் வழக்குரைஞரின் பெயரைக் கொண்டு கையெழுத்திடப்பட்டு சட்டபூர்வமாக முத்திரிக்கப்படுகிறதோ, சகோதரனே, அது அந்த காகதத்தில் இருக்கும்வரை அது சட்டத்திற்குட்பட்டதா யிருக்கிறது. அதுசரியே. அது உண்மைதானா? 60.அதே போல், தேவனுடைய ஆவியினாலே பிறந்திருக்கிற மனிதனை, (பாவனை விசுவாசம் அல்ல, ஆனால் உண்மையிலேயே தேவனுடைய ஆவியி னால் நிரப்பப்பட்டவன்) மீட்கப்படும் நாள் மட்டுமாக முத்திரித்திருக்கிறார். அவன் இன்றைக்கும் கிறிஸ்துவை போலிருப்பான்; நாளையும் கிறிஸ்துவைப்போலிருப்பான்; நாளை மறுநாளும் கிறிஸ்துவைப் போலவே இருப்பான். சோதனையிலும் கிறிஸ்துவை போலிருப்பான்; துன்பத்திலும் கிறிஸ்துவைப்போலிருப்பான்; பசியிலும் கிறிஸ்துவைப் போலிருப்பான். நீங்கள் அவனை அல்லது அவளை எங்கே பார்த்தாலும் கிறிஸ்துவை போலவே இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் பரிசுத்த ஆவியினாலே முத்திரிக்கப்பட்டிருக்கி றார்கள். நான் சொல்வது புரிகிறதா? ஏனெனில் அது உங்களுடைய ஆவி அல்ல. 61.சகோதரனே, சகோதரியே தேவனிடம் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்காதி ருங்கள். ஏனெனில் யூபிலியின் சமயம் உன் வாசலை கடந்துபோகிற நேரம் வந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு நீ சாத்தானின் தூணன்டை அழைத்து செல்லப்பட்டு உன் காதுகள் துவாரமிடப்படும். அதற்கு மேல் உன்னால் அந்த மகத்தான சுவிசேஷத்தை கேட்க முடியாது. "சகோதரனே, நீர் என்ன சொல்ல வருகிறீர்? உனக்கு அதினால் எந்த பிரயோஜனமும் இருக்காது என கூறுகிறேன். பரிசுத்த ஆவிக்கு விரோதமான தேவதூஷனம் என்றால் என்வென்று தொயுமா? அதை நிராகரிப்பதுதான். அது சரியே! அவர்கள் பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் எப்பொழுது தேவதூஷனம் உரைத்தார்கள் தெரியுமா? இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தபோது. அவரை பெயல்செபூல் என்று அழைத்தனர். அவர் செய்த அந்த கிரியைகளை கண்டு, "நீ பெயல்செபூலினால் இவைகளை செய்கிறாய்" என்றனர். அப்பொழுது இயேசு அந்த மனிதர்களிடம், அவர்கள் என்ன செய்தனர் என்பதை கூறினார். அவர்கள் அவரை விசுவாசியாமற்போனார்கள். ஒரு மனிதனுக்கு சத்தியமானது கொடுக்கப்பட்டு, அவன் அதைவிசுவாசிக்க மறுப்பானானால், அவ்வளவுதான், அத்தோடு முடிந்தது. அது நிச்சயம். 62.ஆகையால் இன்றிரவிலே நீங்கள் கர்த்தரை அறியாமல் இருப்பீர்களானால், அல்லது நீங்கள் ஒரு சமயம்பெற்றிருந்த அனுபவத்தைக் காட்டிலும், கர்த்தரை அருமையானவராகவும், அன்புள்ள வராகவும், அன்பான இரட்சகராகவும் அறியாமலிருப்பீர்களானால், சரியாக இன்றிரவு இப்பொழுதே அவரை ஏற்றுக் கொள்ளமாட்டீர்களா? நீ இதற்காக பலிபீடத்தண்டை வரவேண்டிய அவசியமில்லை. அப்படி வரவிரும்பினால் பரவாயில்லை. ஆனால் நீங்கள் மாத்திரம் அவரை அறியாமல் இருப்பீர்களானால்.... @@இப்பொழுது உங்களுடைய பார்வையில் நான் உங்களுடைய சகோதரனாக கிருபை பெற்றிருப்பேனானால் மற்றும் நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால் எனக்கு ஒரு நிமிடம் செவிகொடுங்கள். இது என்னுடைய சொந்த கருத்து ஆனாலும் இதையொரு காரணத்திற்காகவே செய்கிறேன். நான் சர்வவல்லமையுள்ள தேவனோடு தொடர்பு கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், நான் இப்பொழுது சொல்வதை சற்று கேளுங்கள். நீங்கள் கிறிஸ்தவர்களானீர்கள் என்றும், நீங்கள் உங்கள் எதிரியோடு சமாதானமாய் இருக்கிறீர்கள் என்றும் நீங்கள் தேவனிடத்தில் சமாதானத்தை பெற்றிருக்கிறீர்கள் என்றும் உங்களுடைய இருதயத்தில் ஏதோ ஒன்றினால் நங்கூரமிடப்படாமல், சூரியன் உங்கள் மேல் உதிக்க அனுமதிக்காதேயுங்கள்'. ''இவ்விதமாக விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்பட்டிருக்கிறபடியால் நாங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்" ரோமர் 5-ம் அதிகாரம் 1-ம் வசனத்தில் இருக்கிறது. "நாங்கள் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்கிற படியால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலம் தேவனிடத்தில் சமாதானத்தை பெற்றிருக்கிறோம்". 63.நீங்கள் உங்கள் அயலானுக்கு அல்லது உங்களை புண்படுத்தினவனுக்கு விரோதமாக பகைமையை கொண்டிருப்பீர்களானால், அப்படி செய்தவரை உங்களால் உங்களுடைய இருதயத்திலே நேசிக்க முடியவில்லை என்றால், அந்த அனுபவத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களை நேசியாதவர்களை நீங்கள் நேசிக்க வேண்டும். உங்களை நேசிக்கிறவர்களை நீங்கள் நேசிப்பீர்களானால் பாவிகளும் அதையே செய்கிறார்களே, ஆனால் இதை உங்களுடைய மதத்தினிமித்தம் நீங்கள் செய்யாமல் உங்கள் இருதயத்திலிருந்து செய்ய வேண்டும். அன்றொரு நாளிலே (அல்லது) இன்று காலையிலே என்று நினைக்கிறேன். நான் எதற்காக எனக்கு ஜெபியுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்? நான் பெண்கள் உடை உடுத்துவது போன்ற காரியங்களைக் குறித்து அதிகமாக விமர்சித்திருக்கிறேன். நான் அப்படியாக இருக்க விரும்பவில்லை , அது தவறு தான். இதோ இங்கே "நான் தவறாயிருக்கிறேன்" என்று அறிக்கையிடுகிறேன். மற்றும் ஊழியக்காரர்கள் வேதாகமமல்லாத காரியங்களை செய்கிறதை கண்டபோது "அது தவறு என்று கூறியிருக்கிறேன். ஆனால் அவர்களை நியாயந்தீர்க்க நான் யார்? தேவனே அவர்களின் நியாயாதிபதி. அந்த ஆவியை தேவன் என்னிடத்திலிருந்து நீக்கிப் போடுவாராக. நான் இயேசுவைப் போலவே இருக்கட்டும். 64.ஒரு வேளை ... என் சகோதரனே இதை கவனியுங்கள் நான் சொல்லுவது உண்மை, ஒரு நாளிலே, நீ சபையிலே மற்றுமொரு விசை இருக்கக் கூடிய தருணம் இல்லாமல் போகக்கூடும். நான் வெளியே சென்று வீடு திரும்பும் போது, என் மனைவி என்னிடம், "உங்களுக்கு இன்னார் இன்னாரை ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்பார்கள். அதற்கு நான் "ஆமாம்" என்பேன். "உங்களுக்குத் தெரியுமா அவர் அன்றைக்கு மரித்து போய் விட்டார்" என்பார்? வில் எட்கர் கிங் என்ற ஒருவன் என்னுடைய சிறு வயது நண்பனாய் இருந்தான். என்னுடைய சிறு பிராயத்தில் நான் அவனோடு விளையாடியிருக்கிறேன். அவன் சிறு வயதிலிருந்தே என்னுடைய நெருங்கின நண்பனாய் இருந்தான். நாங்கள் ஒன்றாக நேரத்தை கழித்திருக்கிறோம். ஒன்றாக தூங்கியிருக்கிறோம், ஒன்றாக வாழ்ந்திருக்கிறோம். ஒன்றாக மீன் பிடித்திருக்கிறோம். நாங்கள் அப்படியாக சிறுவர்களாக வளர்ந்து வந்தோம். ஒரு சமயம் நான் வெளிநாட்டில் இருந்தபோது... அவன் ஒரு திட காத்திரமான வாலிபன். ஒரு சமயம் தெய்வீக சுகமளிப்பையும் பெற்றிருந்தான். அவன் நடந்து போய் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு அதே இடத்தில் சட்டென்று மரித்து போனான். வில் எட்கர் கிங்குக்கு இப்படி நடக்கும் என்று யாராவது நினைக்கக்கூடுமா? என்னை விட எட்டு அல்லது பத்து வயது சிறியவன் அவன் இருப்பினும் கிட்டத்தட்ட நுாற்றியெண்பது பவுண்டு எடையுள்ள திடகாத்திரமான வாலிபன். அவன் நல்ல ஆரோக்கியமுள்ள வனாக அவனுடைய அருமையான மனைவியுடனும் மூன்று அல்லது நான்கு சிறு பிள்ளைகளுடனும் நடந்து போய்க் கொண்டிருந்தபோது அப்படியே கீழே விழுந்து இறந்துவிட்டான். அவன் தெற்கிலுள்ள பலசரக்கு அங்காடிகளுக்கெல்லாம் பொருட்களை கொள்முதல் செய்யும் தலைமை அதிகாரியாய் இருந்தான். நல்ல வேலை, அருமையான வீடு, அருமையான குடும்பம், ஆனாலும் நொடிப்பொழுதிலே கடந்து போய்விட்டான் (சகோதரன் பிரான்ஹாம் சொடக்கு போடுகிறார்) சகோதரனே, தேவன்...இப்பொழுது அவனுடைய ஆத்துமாவானது, சரியான நியாயத்தீர்ப்பை கொடுக்கக்கூடிய நீதியுள்ள தேவனுடைய கரங்களில் இருக்கிறது. 65.நாமும் இன்றைக்கு இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். நாளை காலை எங்கிருப்போம் என்று தேவன் மாத்திரமே அறிவார். ஆகவே நீங்கள் தேவனிடத்தில் சரியாக இல்லாமல் இருப்பீர்களானால்... நாம் ஜெபிக்கும் வேளையில், நீங்கள் சரியாக இப்பொழுதே உங்களுடைய இருதயத்தில், என்னிடத்தில் அல்ல, அல்லது மக்களிடத்தில் அல்ல, தேவனுக்கு முன்பாக, "ஆண்டவராகிய இயேசுவே, நான் இவ்வளவு நாட்கள் விளையாட்டுத்தனமாய் இருந்துவிட்டேன், ஆனாலும் இன்றிரவு, உம்மை என்னுடைய சொந்த இரட்சகராக என்னுடைய இருதயத்தில் முழுவதுமாய் ஏற்றுக்கொள்ளக் கூடிய நேரம் இதுவே என்று உணருகிறேன். இது முதற்கொண்டு, உம்முடைய கிருபையினாலே, நான் கல்வாரியையே நோக்கிப்பார்த்துக் கொண்டு ஒரு ஒழுக்கமுள்ள கிறிஸ்தவ ஜீவியத்தை நடத்த விரும்புகிறேன்" என்று சொல்லுங்கள். நாம் ஜெபிக்கலாமா. எங்கள் பரலோகப் பிதாவே, உம் மேல் அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம். இதோ மக்களுக்கு ஆவிக்குரிய காரியங்களை போஷிக்கிற ஒருஆசாரியனாக, ஒரு ஊழியக்காரனாக மற்றும் இன்றிரவிலே ஜீவனுள்ளோருக்கும் மரித்தோருக்கும் மத்தியில் நிற்கிற நான், ஒரு நாளிலே நான் கிறிஸ்துவின் நியாயாசனத் தினண்டையிலே, நான் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் கொடுக்க வேண்டியவனாக இருக்கிறேன் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை. பிதாவே, இதோ நான் எதை சொன்னாலும் அதை அப்படியே செய்கிற அருமையான புருஷர்களும் ஸ்திரீகளும் இங்கிருக்கிறதை பார்க்கும் போது (டேப்பில் காலியான இடம் உள்ளது). ஆண்டவரே, இப்படிப்பட்ட நல்ல உள்ளத்தோடும் தேவையோடும் வந்திருப்பவர்களிடத்தில், "நீ ஒன்று கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது தள்ளப்படுவீர்கள்" என்று மிக கடினமான வார்த்தைகளை பேசுவதென்பது ஒரு மனிதனாக மிக கஷ்டமான காரியமாக இருக்கிறது. 66.ஆனாலும் பிதாவே, அதுவே நான் அவர்கள் மேல் சுத்தமுள்ள தெய்வீக அன்பைக் கொண்டிருக்கிறேன் என்றும் காட்டுகிறது. ஏதோ அவர்களை காயப்படுத்துவதற்காக அல்ல. ஆனால் இது அவர்களை நித்திய நித்தியமாய் நேசிக்கிறதைக் காட்டுகிறது. மேலும் நியாயத்தீர்ப்பின் நாளிலே அவர்களுக்கு பதிலாக நிற்கப்போகிற உம்முடைய குமாரனாம் கர்த்தராகிய இயேசுவை அவர்களுக்கு அளித்திருக்கிறேன். பிதாவே, நீர் ஒவ்வொருவரையும் ஏற்றுக்கொள்வீர் என ஜெபிக்கிறேன். கைகள் உயர்த்திட நான் கேட்கவில்லை. அப்படிச் செய்யவேண்டும் என்று உணர்த்தப்படவுமில்லை. ஆனாலும் பிதாவே, இங்கிருக்கிறவர்களில் அநேகர், உம்மிடம் நெருங்கி நடக்க விரும்புகிறார்கள் என்பதை மாத்திரம் உணருகிறேன். அவர்கள் தங்களை ஒப்புக் கொடுக்க விரும்புகிறார்கள். அதை சரியாக இப்பொழுதே செய்து கொண்டிருக்கின்றனர். கர்த்தாவே, அவர்கள் தங்களுடைய எல்லா சிறுபளுவையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, "எங்களுடைய வாழ்கையானது எளிதில் நொறுங்கிவிடும் நிலையில் இருக்கிறதை காணும்போது அதில் எந்த நம்பிக்கையும் இல்லை என்று அறிகிறோம். ஆகையால் இன்றிரவு முதல் பாரமான யாவற்றையும் ஒதுக்கிவிட்டு எனக்கு இருக்கும் யாவையுங்கொண்டு கர்த்தராகிய இயேசுவிற்கே முழுவதும் செலவிட விரும்புகிறேன்" என்று கூறுகிறார்கள் என்று விசுவாசிக்கிறேன். தேவனே இன்றிரவிலிருந்து அவர்கள் அப்படியே நடந்திட கிருபை பாராட்டும். பிதாவே இவர்கள் நொறுக்கப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை எடுத்து இந்த இராப்போஜன பந்தியிலே கலந்துகொள்வார் களாக. அதன்பின் நாங்கள்... அவர்கள் மிக உத்தம இருதயத்தோடு செய்யும் பட்சத்தில், நீர் அவர்களை கடைசி நாளிலே எழுப்பி அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பீர் என்று சொன்னீர். இரக்கமுள்ள பிதாவே இந்தக் காரியங்களை அருளும். இவைகளை உம்முடைய குமாரனாம் இயேசுவின் நாமத்திலே கேட்கிறோம். ஆமென். 67.இப்பொழுது, எத்தனை பேர் உங்கள் இருதயத்தை அர்ப்பணித்தீர்களென்று கேட்கப் போவதில்லை. ஆனால் அநேகர் அதை செய்தீர்களென்று விசுவாசிக்கிறேன். நானும் என்னுடைய இருதயத்தில் "தேவனே அந்த விமர்சிக்கிற ஆவியை என்னிடமிருந்து எடுத்துப்போடும்" என்று கேட்டுக்கொண்டேன். நான் மக்களை முகத்துக்கு நேராய் விமர்சிக்கிறதில்லை , ஆனால் என்னுடைய இருதயத்திலே அப்படி செய்வதுண்டு. ஒரு பெண் சாலையிலே நடந்து போகும்போது, குறிப்பாக ஒழுக்கமற்ற உடையை அணிந்து செல்வதை பார்க்கும்போது, என்னுடைய இருதயத்தில், "இது கேவலமாக இல்லையா?" என்று கூறுவதுண்டு. அதை நேராய் ஒருவரிடமும் வெளியிலே சொன்னதில்லை. சொல்லப்போனால், அது அவளை பொறுத்ததான காரியமாக இருக்கிறது. அவள் சுயமாய் நிதானித்து முடிவெடுக்கக்கூடிய உரிமையை பெற்றவளாய் இருக்கிறாள். இருப்பினும் அவள் அப்படிச் செய்ய அவளுக்கு எந்த உரிமையும் இல்லை, ஏனென்றால் கிறிஸ்து அவளுடைய ஜீவனை வாங்கிவிட்டார். ஒருவேளை அவள் அதை புரிந்துக் கொள்ளாமல் இருக்கக்கூடும். ஆகையால் குறை கூறுவது என்னுடைய வேலை அல்ல, அதை தேவன் பார்த்துக் கொள்ளட்டும். நான் இந்த பிரசங்க பீடத்தில் நிற்கும் போது, எனக்கு தெரிந்த மிக சிறந்த முறையில் சுவிசேஷத்தை மட்டும் பிரசங்கிக்கட்டும். மீதமுள்ள காரியங்களை தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்கிறேன். நண்பர்களே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 68.இப்பொழுது இன்னும் சற்று நேரத்தில் நாம் இராபோஜன ஆராதனையை கொண்டிருக்கப் போகிறோம். எத்தனை பேர் இராபோஜன ஆராதனையை விசுவாசிக்கிறீர்கள்? (சபையோர் "ஆமென்" என்கின்றனர்) நன்றி. அதை நாம் கடைபிடிக்கும்படி இயேசு கிறிஸ்து நமக்கு போதித்திருக்கிறார். அவர் திரும்பி வருமட்டுமாக அவருடைய உடைக்கப்பட்ட சரீரத்தை எடுக்கும்படி கூறியிருக்கிறார். மேலும் இதை உண்மை என்று விசுவாசிக்கிறவர்கள், நீங்கள் தேவனுடைய வார்த்தையோடு, இந்த சிறு ஐக்கியத்திலே எங்களோடு சேர்ந்து ஆசரிக்க விரும்புவீர்களானால், இங்கே எங்களோடு தங்கியிருந்து இந்த நேரத்தில் ஆசரிப்பதில் நாங்கள் மிகுந்த சந்தோஷமடைகிறோம். அப்படி ஆசரிக்கவில்லையென்றால் இன்னும் சற்று நேரத்தில் நாங்கள் இதனை நிறைவு செய்திடுவோம்.நீங்கள் மீதியானவர்களுடன் சற்று நேரம் தங்கியிருந்து நாங்கள் இராபோஜன பந்தியை அனுசரிக்கும் முறையை கவனிக்கலாம். இது வெறுமனே... இது தெய்வீக சுகமளித்தலுக்காகவும் அனுசரிக்கப்படுகிறது. உங்களுக்குத் தெரியுமா? இஸ்ரவேல் மக்கள் இதனுடைய மாதிரியான, பஸ்கா ஆட்டுக் குட்டியை உட்கொண்டு நாற்பது வருடங்கள் வனாந்திரத்திலே பிரயாணப்பட்டு முடித்தபோது, அவர்களில் ஒருவர் கூட பெலவீனமாகவில்லை . அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், நாற்பது வருடமாய் ஒருவன் கூட பெலவீனமாகவில்லை. இராப்போஜனம் என்பது விசுவாசிகளின் அடையாளமாயிருக்கிறது. 69.இப்பொழுது, சபையின் நலனுக்காக, 1 கொரிந்தியர், 11- ஆம் அதிகாரம் 23-ஆம் வசனம் முதல் வாசிக்கப்போகிறேன். இது பவுல் பேசுகிற வசனங்கள். நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம் பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து : இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. நீங்கள் இதை பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால், நீங்கள் இந்த அப்பத்தை புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். இது அற்புதமாக இல்லையா?" கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தை அறிவிக்கிறீர்கள்" இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். 70."இதனுடைய அர்த்தம் என்ன சகோதரன் பிரான்ஹாம் அவர்களே?" அதனுடைய அர்த்தம் என்னவென்றால், நீங்கள் இங்கு வந்து இராபோஜனத்தை எடுத்து வெளியே போய், ஒரு கிறிஸ்தவன் எப்படி ஜீவிக்க வேண்டுமோ அப்படி ஜீவிக்காமல் வேறு விதமாக ஜீவிப்பீர்களானால், நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு நிந்தையையும் அவமானத்தையும் கொண்டு வருகிறீர்கள். புரிந்து கொண்டீர்களா, நீங்கள் கிறிஸ்தவராய் இருந்தால் வாருங்கள், இல்லையென்றால் எடுக்காதிருங்கள். இதை கவனியுங்கள் எந்த மனுஷனும் தன்னைத் தானே சோதித்தறிந்து இந்த அப்பத்தில் புசித்து இந்த பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன் என்னத்தினாலெனில்... 29-ம் அபாத்திரமாய் போஜனபானம்பண்ணு கிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்புவரும்படி போஜனபானம் பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள். அநேகர் நித்திரையும் அடைந்திருக்கி றார்கள். ஆகையால் நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம் ஆகையால் நாம் நியாயந்தீர்க்கப்படும் போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படு கிறோம். 71.நாம் இந்த அப்பத்தை புசித்து, இந்த பாத்திரத்தை பாணம்பண்ணும்போது, நம்மை நாமே சோதித்தறிந்து, "அதற்கு நான் பாத்திரனாய் இருக்கிறேனா?" என்று ஆராய வேண்டும். நல்லது, நான் அதற்கு பாத்திரனாய் நடப்பதில்லை, இல்லை ஆனாலும் கிறிஸ்து எனக்குள்ளிருந்து என்னை பாத்திரனாய் நடக்கச் செய்கிறார். நான் அவரை நேசிக்கிறேன் மற்றும் அவரைக் குறித்து சாட்சி பகருகிறேன். நான் பரிபூரணமானவன் அல்ல. நான் இந்த உலகத்தில் இருக்கும் மட்டுமாக ஒருபோதும் பரிபூரணமாய் இருக்கப்போவதில்லை. நீங்களும் பரிபூரணமானவர்கள் அல்ல, ஒருபோதும் அப்படி ஆகவும் போவதில்லை. ஆனாலும் நான் அவர் மேலாக வைத்திருக்கும் அன்பினாலே, நான் அவருக்காக ஜீவிக்கும்படி அவர் என்னை அனுமதிக்கிறார். ஓ, நான் அதைத் தொடர்ந்து நேசிக்கவும் மற்றும் அவரைக் குறித்தே சாட்சி பகரவும் விரும்புகிறேன். நான் வெளியே சென்று களித்து, ஆட்டம் போட்டு, அவருடைய நாமத்திற்கு நிந்தையைக் கொண்டுவரும் படியாக தீமையான காரியங்களை செய்கிறதில்லை. என்னதினாலெனில், நான் தவறான காரியத்தை செய்யும்பொழுது தேவனாலே சிட்சிக்கப்படுகிறதைப் பார்க்கிறேன். தேவன் ஏன் அப்படி செய்கிறார் தெரியுமா? நாம் உலகத்தோடு சேர்ந்து ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு அப்படிச் செய்கிறார். 72.இப்பொழுது, அவிசுவாசிக்கும் விசுவாசிக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறவர் தேவனே. நினைவில் கொண்டிருங்கள். எகிப்திலிருந்த விசுவாசிகள் அனைவரும் எதற்குள்ளாக இருந்தார்கள் என்று பார்த்தீர்களா? எதன் கீழாக? இரத்தத்தின் கீழாக இருந்தனர். ஆட்டுக் குட்டியானது அடிக்கப்பட்டு, ஈசோபினால் அதனுடைய இரத்தம் தோய்க்கப்பட்டு கதவிலே தெளிக்கப்பட்டிருந்தது. அது எங்கே தெளிக்கப்பட்டது என்று பார்த்தீர்களா? "கதவின் நிலைக்காலிலே தெளிக்கப்பட்டிருந்தது. சரியாக கதவுகள் பொருந்தும்படி இருக்கும் சட்டங்களிலே, அதாவது சரியாக நிலைக் கால்களிலே, கதவின் சட்டங்களிலே தெளிக்கப்பட்டிருந்தது. அது என்ன என்று பார்த்தீர்களா? அது சிலுவைக்கு அடையாளமாக இருந்தது. தேவ ஆட்டுக் குட்டியானவர் அடிக்கப்படுவதற்கு நுாற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்னதாகவே இது நடைபெற்றது. அந்த ஆட்டுக் குட்டியானவருக்கு ஒருமாதிரியாக இங்கே நிலைக்காலில் மேல் பூசப்பட்டிருந்தது. ஆகவே அந்த இரத்தத்தின் கீழ்வருகிற ஒவ்வொரு இஸ்ரவேலரும் அதற்கு மேல் வெளியே போகக்கூடாதபடிக்கு தடைசெய்யப்பட்டி ருந்தார்கள். அதுதான் காரியம். வெளியே செல்ல உங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டி ருக்கிறது. அவர்கள் இரத்தத்தின் கீழ் இருந்தனர். அவர்கள் மீண்டுமாய் அணிவகுத்து முன்னேறி கடந்து செல்லலாம் என்ற கட்டளையை பெறுமட்டுமாக வெளியே செல்ல முடியாதிருந்தது. கிறிஸ்துவுக்கு மாதிரியாக இருக்கிறது. "ஏனெனில் கிறிஸ்து இயேசுவினால் பரிசுத்தமாக்கப் படுகிறவர்களை ஒரே பலியினாலே அவர்களை என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்" ஒரே தரம் தான். பின்னிட்டுபோக முடியாது. இந்தப் பக்கமும் போக முடியாது. மற்ற காரியங்களையும் செய்ய முடியாது. அப்படி நீங்கள் பின்னிட்டுப் போய் தவறான காரியத்தை செய்வீர்களானால், மனந்திரும்பி மீண்டும் வாருங்கள். புரிகிறதா, ஒரு மனிதனின் ஆத்துமாவை கிறிஸதுவானவர் ஒரு முறை பரிசுத்த ஆவியினால் நிரப்பி அவனை பரிசுத்தப்படுத்துவாரானால், அது என்றென்றைக்கும் பூரணப்பட்டதாய் இருக்கும். அவ்வளவு தான், அதற்குமேல் அதற்கு மீண்டுமாய் வெளியிலே செல்லவேண்டும் என்ற வாஞ்சை இராது. ஏனெனில் 'ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்ட பின்பு இன்னும் பாவங்களுன் டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இராது" அல்லது அதனுடைய சரியான மொழிப் பெயர்ப்பு "வாஞ்சை" இராது என்று அர்த்தமாகும். ஆராதனை செய்கிறவன், ஒரு முறை சுத்திகரிக்கப்பட்டால்... ஓ அதை குறித்து இன்னும் ஆழமாகச் செல்ல வாஞ்சிக்கிறேன். ஆராதனை செய்கிறவன் அதாவது விசுவாசி ஒரு முறை சுத்திகரிக்கப்படுவான் என்றால், அவனுக்கு இனி பாவம் செய்யவேண்டும் என்ற வாஞ்சை இராது. அது என்றென்றைக்கும் தீர்க்கப்பட்டதாய் இருக்கும். ஏனெனில், கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக இருக்கிறவர்களை, அவர், அந்த ஒரே பலியினாலே என்றென்றைக்குமாய் பரிபூரணமாக்கியிருக்கிறார். இந்த உலகம் உங்களுக்கு செத்ததாயும், அதைக் குறித்து இனி ஒருபோதும் அக்கரை இல்லாதவர்களுமாக இருப்பீர்கள். உங்களுடைய வாஞ்சைகளெல்லாம் பரத்துக்குரிய காரியங்கள் மேலேயே இருக்கும். 73.இப்பொழுது, நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்லி, இன்னும் உலக ஜீவியத்தை ஜீவித்துக் கொண்டிருப்பீர்களானால், நீங்கள் உலகத்தோடு சேர்ந்து ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கபடாமலிருக்க தேவன் உங்களை சிட்சிப்பார். ஆகையால் தான், நீங்கள் கூடிவரும் பொழுது... ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள் (இதை கவனியுங்கள்) நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு ஒருவனுக்கு பசியாயிருந் தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம் பண்ணுவேன். 74.நீங்கள் பவுல் சொன்னதை கவனித்தீர்களா. கொரிந்தியர்கள் அதை பிடித்துக்கொள்ளவில்லை. அவர்கள் தேவனுடைய பந்திக்குச் சென்று புசித்து குடித்து வெறித்தார்கள். அவர்கள் தவறான முறையில் புசித்து குடித்தார்கள். ஆகையால் தான், "நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும் போது, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். ஆனால் நீங்கள் கூடி வரும்போது நீங்கள் ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்" என்று பவுல் கூறினார். அதாவது, ஒருவருக்காக ஒருவர் காத்திருக்க வேண்டும்."இதோ இங்கே இருக்கிற இந்த சகோதரன், அவர், இராபோஜனம் எடுக்கக்கூடாது என்று நினைக்கிறேன்" என்று சொல்லுகிறீர்கள். அதற்காக உடனே ஓடி அவரை வெளியே இழுத்துத் தள்ளவேண்டாம். அவரோடு கொஞ்சம் பொறுமையாயிருங்கள். ஆராதனை முடிந்த பிறகு, ஒரு இரவு அவருடைய வீட்டிற்குச் சென்று அவருடன் உட்கார்ந்து, மிகச் சாந்தமாக, "சகோதரனே, நான் தவறுதலாக இதைப் புரிந்து கொண்டிருப்பேனானால் என்னை மன்னியுங்கள். ஆனால் நீர் குடிபோதையில் அன்றொரு நாளில் சாலையிலே இருந்ததைப் பார்த்தேன். (அல்லது எதைச் செய்தாரோ அதைச் சொல்லுங்கள். அப்படியாக நீர் உம்முடைய மனைவியல்லாத வேறு ஒரு ஸ்திரீயோடு வெளியே இருந்ததைப் பார்த்தேன். நீர் அந்தப்படியே வந்து இராபோஜனத்தையும் எடுக்கிறீர். சகோதரனே, உம்மை நான் நேசிக்கிறேன். இந்த காரியத்திற்காக நீங்களும் நானும் முதலாவது ஜெபித்து சரிசெய்யலாம்" என்று சொல்லுங்கள். புரிகிறதா? ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். ஒருவருக்கொருவர் ஊழியம் செய்கிறவர்களாய் இருங்கள். மற்றவரைக் காட்டிலும் பெரியவனாய் இருக்க விரும்பாதிருங்கள். உங்களால் முடிந்த மட்டும் சிறியவனாய் இருக்க முயற்சியுங்கள். நான் அடிக்கடி இவ்விதமாக மக்கள் கூறுவதை கேள்விப்படுவதுண்டு, "நீ உன்னுடைய சொந்தப் பார்வையில் உன்னை பெரியவன் என்று ஒருபோதும் எண்ணிக் கொள்ளாதே" என்று; பாருங்கள். நீ பெரியவனாக இருப்பாயானால், தேவனுடைய பார்வையில் அப்படியாய் இருக்கட்டும். உன்னுடைய பார்வையிலே நீ தாழ்மையுள்ளவனாகவே இரு. தன்னைத் தானே தாழ்த்துகிற ஒவ்வொரு வரையும் தேவன் உயர்த்துவார். தன்னைத்தானே உயர்த்துகிறவனை தேவன் தாழ்த்துவார். புரிகிறதா? தாழ்மையுள்ளவர்களாக வேயிருங்கள். 75."ஓ அந்த நபர்..." "நல்லது, அவர் என்னுடைய சகோதரன் அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் நான் அவருடைய ஊழியக்காரனாக இருக்கவிரும்புகிறேன்" பார்த்தீர்களா? ஒருவருக்கொருவர் ஊழியக்காரர்களாக இருங்கள். ஒருவரையொருவர் அன்புகூறுங்கள். ஓ அவ்விதமாக இருக்கும் பட்சத்தில் அது எப்பேற்பட்ட... நாங்கள் வழக்கமாக ஒரு சிறுபாடலை பாடுவதுண்டு. அது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை . நாங்கள் அதை இப்படியாகப் பாடுவோம்: நம்முடைய இருதயத்தை கிறிஸ்தவ அன்பினால் இணைத்துக்கட்டின கட்டு ஆசீர்வதிக்கப்படட்டும் அது பரலோகத்தின் ஒரே சிந்தையுடைய ஐக்கியத்தைப் போல இருக்கச்செய்கிறது ஆகையால் தான் நாம் இங்கிருந்து கலைந்து போகும்போது, நம்முடைய உள்ளத்திற்கு வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் இருதயத்திலே பிரியாதவர்களாக ஒன்று பட்டிருப்போமாக. மறுபடியும் சந்திப்பேன் என நம்புகிறேன். 76.நான் ஒரு சமயம் செய்ண்ட் ஆன்ஜலோ நிலத்தடி கல்லறையண்டை நின்றிருக்கிறேன். அங்கே மரித்தவர்களை புதைப்பதற்கென்று மிகப்பெரிய, கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்திற்கு நிலத்தடி கல்லறையை அமைத்திருந்தார்கள். ஒரு மூலையிலே சிறுவர்களுக்காக சின்ன சின்ன கல்லறைகளை கொண்டிருந்தனர். அப்படியாக சிறு பிள்ளைகளை ஒரு மூலையிலே வைத்திருந்தனர். மற்றும் யாருக்கும் தெரியக் கூடாதபடிக்கு அதற்குள் ஒரு மறைவான தேவாலயத்தையும் கொண்டிருந்தனர். பின்னர் கிறிஸ்தவர்களை கட்டி, எரித்து, சிங்கங்களுக்கு இரையாகவும் கொடுத்த அந்த பழைய ரோம கத்தோலிக்க தேவாலயத்திற்குச் சென்றிருந்தேன். நான் அங்கேநடந்து சென்று, அந்த சம்பவம் நடந்த இடத்தின் மைய பகுதியிலே நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன். நான் அதுமட்டும் அதை பார்த்ததில்லை. புழுதிகள் குவிந்திருந்தது. சிங்கங்கள் வருவதற்கென மகத்தான இடமும் இருந்தது. நான் சரியாக நடந்துசென்று சிங்க கெபி எங்கிருந்திருக்கும் என்று நினைத்தேனோ அதாவது எங்கே கிறிஸ்தவர்கள் மரித்தார்களோ அங்கே நின்ற வண்ணமாய் என்னுடைய கைகளை உயர்த்தி,"ஓ, இயேசுவே, இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாய் சிங்கங்களின் வாயினூடாக தங்கள் சாட்சிகளை முத்தரித்த என்னுடைய சகோதரர்களை நினைக்கும்போது, நான் மிகவும் தகுதியற்ற பிறவியாயிருக் கிறேன்" என்றேன். 77.அப்படியே நான் எழும்பி எனக்கு பின்னாகத் திரும்பிப் பார்த்தபோது யாரோ அங்கே ஒரு பழைய கரடு முரடான சிலுவையை தூரத்திலே எழுப்பியிருந்தனர். நான் உடனே என்னுடைய இருதயத்திலே "ஓ, அங்கே வெகு தூரத்தில் ஒரு குன்றின் மேல் ஒரு பழைய கரடுமுரடான சிலுவை நிற்கிறது, அது துன்பமும், மற்றும் அவமானத்தின் சின்னமுமாம்" என்ற பாடலை முனங்க ஆரம்பித்தேன். ஓ, காலங்களினூடாய், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்த சாட்சிகளின் இரத்தத்தினாலே இந்த உலகம் முழுவதுமாய் நனைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது, நாம் எவ்வளவு சிறிய மக்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒரு சின்ன மிஷெனரி ஊழியப் பயணத்தை செய்யலாம் என்று நினைக்கும்போது சில துன்பங்களை சகித்திட வேண்டியிருக்கிறது. சிலர் உன்னைப் பார்த்து நகைப்பார்கள். நான் மக்களால் எப்பக்கமும் எட்டி உதைக்கக்கூடிய கால்பந்தைப் போல் மாறிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் அது எனக்கு எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகிறதில்லை. அவர்கள் எனக்கு முன்பாக வந்தவர்களையும் அப்படியாகவே உதைத்துதள்ளினர். இதைப்போல் பல்வேறான காரியங்களைச் செய்து, பல்வேறு பெயர்களையும் சூட்டினர். ஆனாலும் நான் பிரசங்கிக்கத்தக்க சுவிசேஷம் ஒன்று உண்டு. நான் நேசிக்கும் ஆண்டவர் ஒருவர் உண்டு. நான் அடைய வேண்டிய இலக்கு ஒன்று உண்டு. என்னுடைய பாதையின் முடிவில் நான் வந்து சேரும்போது, "நான் ஒரு நல்ல போராட்டத்தைப் போராடினேன்" என்று உங்கள் எல்லோருடனும் சேர்ந்து கூற விரும்புகிறேன். ஓர் இரவிலே, நான் பிரசங்க பீடத்தில் நின்றுகொண்டிருக்கும் போது என்னுடைய முகம் வெளுத்துப் போய், என்னுடைய உதடுகள் இறுக மூடிப்போகும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நான் இந்த விதானத்திலே (அதாவது பிரசங்கபீடத்திலிருந்து) மகிமையின் வீட்டிற்கு கடந்து செல்ல வாஞ்சிக்கிறேன். வருகிற ஓர் நாளிலே நான் என்னுடைய கடைசியான செய்தியைப் பிரசங்கிக்கப் போகிறேன். என்னுடைய கடைசியான பலிபீட அழைப்பை விடுப்பேன். கடைசியாக வியாதியஸ்தருக்காக ஜெபிப்பேன். பிறகு நான் என்னுடைய கரத்திலே வேதாகமத்தைக் கொண்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அழைத்தபடி மரிக்க விரும்புகிறேன். நல்ல போராட்டத்தைப் போராடி ஓட்டத்தை முடிக்க விரும்புகிறேன். 78.என்னுடைய அருமையான சகோதர சகோதரிகளே, என்ன நடந்திருந்தாலும் சரி, ஒருவேளை கிறிஸ்துவுக்கு முரண்பாடாக ஏதாவது ஒரு காரியமானது உங்களுடைய வாழ்கையிலே இருக்குமானால், நாம் அதை அறிக்கை செய்து விட்டுவிட்டு, இங்கேவந்து கர்த்தருடைய பந்தியை எடுத்துக் கொள்ளுங்கள். கிறிஸ்தவ விசுவாசத்தி னாலே நம்முடைய இருதயங்கள் ஒரே சரீரமாய் இணைக்கப்பட்டு நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவை முழு இருதயத்தோடு நேசிக்கிறோம் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். இசை வாசிக்கும்போது நீங்கள் அப்படிச் செய்வீர்களா? டெடி , நீங்கள் வாசிப்பீர்களா. குழு குழுவாக வருவீர்கள் என்று நினைக்கிறேன். அது சரிதானே சகோதரனே (சகோதரன் நெவில், "ஆம்" என்கிறார்) இப்பொழுது மூப்பர்கள் எங்களுக்கு உதவி செய்யும்படி முன்புக்கு அழைக்கிறேன். இங்கே வந்து நில்லுங்கள்.சகோதரன் நெவில், எந்த பக்கத்திலிருந்து துவங்குவீர்கள்? இந்த பக்கத்திலிருந்தா? நல்லது நீங்கள் எல்லோரும் இங்கு ஒரே நேரத்தில் வரவேண்டிய அவசியம் இல்லை . அப்படியான முறைமையை இந்த சகோதரர்கள் இங்கே கடைபிடிக்கின்றனர். இப்பொழுது நீங்கள் வந்து எங்களுடன் இராபோஜனத்தில் பங்கு கொள்ளலாம்.இந்த இராபோஜனத்தில் நீங்கள் எங்களோடு பங்கு கொள்வதற்காக நாங்கள் மகிழ்ச்சியடை கிறோம். (சகோதரன் பிரான்ஹாம் துவங்கி வைக்க, அப்பமும் திராட்சை ரசமும் அளிக்கப்படுகிறது. டேப்பில் காலியான இடம்.) 79.இன்றிரவு, நான் கிறிஸ்தவனாய் இருப்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்று நம் எல்லோராலும் கூற முடியும் என உறுதியாய் நம்புகிறேன். இப்பொழுது நாம் கடைபிடித்த இந்த காரியமானது இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இது நம்முடைய கர்த்தராகிய இயேசு கடந்து போவதற்கு முன்பாக நடைபெற்றது. இதை அவர் மீண்டுமாய் திரும்பி வருமளவும் செய்யுமாறு கட்டளையிட்டார். இதை அவர் தம்முடைய சொந்த வார்த்தையினாலே நமக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.ஆகவே இது விழுந்து போகாது, விழுந்துபோகவும் முடியாது. பரிசுத்த யோவான் 6 - ம் அதிகாரத்திலே "என் மாம்சத்தை புசித்து என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவன் எவனோ அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. கடைசி நாளிலே நான் அவனை எழுப்புவேன்" என்று சொன்னார். நான், இந்த உலகத்திலுள்ள சூரிய வழிபாடுகள், விக்கிரக ஆராதனைகள் மற்றும் இயற்கைக்கு மேலானவர் பற்றிய அவர்கள் கொண்டிருக்கிற கருத்து மற்றும் இது போன்ற போலியான மதங்களை பார்த்த பின்னர், இது நிச்சயமாகவே எனக்கு நம்பிக்கையளிக்கிறதாய் இருக்கிறது. இந்த வார்த்தை எப்படி விழுந்து போக முடியாததாய் இருக்கிறது என்று பார்த்தீர்களா? அது விழுந்து போகாது என்று நிரூபித்தவரே இந்த கடைசி நாளில் நம்மை எழுப்புவார் என்ற தெய்வீக வாக்குத்தத்தத்தையும் அளித்திருக்கிறார். 80.இப்பொழுது நம்முடைய வளாகத்தில் புதிதாய் வந்திருப்பவர்களுக்கு இதைச் சொல்லட்டும். நாம் இங்கே செய்ததைக் காட்டிலும் இன்னும் ஒரு காரியம் இருக்கிறது. அதை முதலாவது நான் வேதத்திலிருந்து உங்களுக்கு வாசித்துக் காட்டட்டும். பரிசுத்த யோவான் எழுதின சுவிசேஷம் 13-ம் அதிகாரம், 2-ம் வசனம் முதல் வாசிக்கிறேன். சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக் கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில்; தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதை யும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்கு போகிறதையும் இயேசு அறிந்து; போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக் கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களை கழுவலாமா என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். அதற்குச் சீமோன் பேதுரு : ஆண்டவரே, என் கால்களை மாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூடக் கழுவவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவ வேண்டியதாயி ருக்கும், மற்றபடி அவன் முழுவதும் சுத்தமாயி ருக்கிறான்; நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார். அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்... நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். நீங்கள் இவைகளை அறிந்திருக்கிற படியினால், இவைகளை செய்வீர்களானால், பாக்கியவான் களாயிருப்பீர்கள். 81.இந்த பாதங்கள் கழுவுதலின் முறைமையை கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக இக் கூடாரத்தின் ஒழுங்காக எப்பொழுதுமே கடைபிடித்துள்ளோம். பாப்டிஸ்ட் மக்கள், பெந்தெகொஸ்தேயினர் வருவதற்கு முன்பாக கடைபிடித்தனர். பெந்தெகொஸ்தேயினர் அவர்களின் ஆரம்ப கட்டத்தில் இதைகடை பிடித்தனர். அவ்விதமாகத்தான் இது கடைபிடிக்கப்பட்டது போல இன்றிரவிலே அந்த ஒழுங்கை கடைபிடிக்கிறோம். நாம் ஒரு ஜெப அறை இங்கே கொண்டிருக்கிறோம். தேவன் நமக்கு அளித்த அந்த அறையிலே ஸ்திரீகள் இந்த நியமத்தை அனுசரிக்க போகலாம். சகோதரர்கள் யாவரும் இங்கே இருக்கிறதான மூப்பர்களின் அலுவலகத்திற்குச் சென்று நாம் பாதம் கழுவும் முறைமையை அனுசரிப்போமாக. மேலும் இன்றிரவு எங்கள் மத்தியில் உள்ள அந்நியர்கள், (அந்நியர்கள் அல்ல ஆனால் ராஜ்ஜியத்தின் சகபிரஜைகள்) நீங்கள் இதுவரை இதை அனுசரித்ததில்லை என்றால், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, உங்கள் முழு மனதோடு இந்த ஐக்கியத்தில் கலந்து கொள்ளும்படியாக அழைக்கிறோம். நீங்கள் இதுவரை இதற்கு முன்பாக செய்ததில்லை என்றால், இதோ இந்த இரவின் பொழுதிலே எங்களோடு முதல் முறையாக எங்கள் ஐக்கியத்திலே அனுசரிப்பதில் சந்தோஷப்படுகிறோம். எனினும், நீங்கள் செய்வதற்கு விருப்பப்படவில்லை என்றால், அல்லது நீங்கள் வீட்டிற்கு உடனடியாக போகவேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் என்றால், அல்லது வேறு எந்த காரியமாக இருந்தாலும் சரி, பரவாயில்லை , இதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம். நீங்கள் எங்களோடு இந்த இரவிலே இருந்தமைக்காக நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். 82.நான் என் பிரசங்கத்தை உங்களுக்கு அளித்த விதானத்திற்காக மன்னிப்பை கோருகிறேன். சொல்ல வேண்டும் என்றால், நான் ஒரு பெரிய பிரசங்கி அல்ல, மற்றும் இது எதிர்பாராத விதமாய் நடந்ததினால் இன்னும் சற்றுகடினமாக ஆக்கிவிட்டது. தேவன் தாமே, எதிர்காலத்தில் இந்த காரியங்களிலே எனக்கு உதவி செய்வாராக. 83.நான் மேற்கிலிருந்து திரும்பி வந்த பிறகு... நிச்சயமாகவே அந்த இடத்தில் தேவன் எனக்கு நல்ல ஓய்வை அளிப்பார் என நம்புகிறேன். அதனால், நான் திரும்பி வரும் போது சகோதரன் நெவிலும் நானும் சேர்ந்து அந்த பண்டைய கால எழுப்புதலின் கூட்டத்தை சில நாட்களுக்கு நடத்தி வார்த்தையை குறித்ததான போதனையை செய்ய விரும்புகிறோம். ஒருவர் என்னை இன்று சந்தித்தபோது, நதியிலே ஞானஸ்நானம் எடுக்க விரும்புவதாக கூறினார். நான் யாருக்கு வேண்டுமானாலும் எங்கு வேண்டுமா னாலும் சரி, நான் நிச்சயமாகவே ஞானஸ் நானம் கொடுக்க சந்தோஷப்படுவேன். 84.நீங்கள் பிரான்ஹாம் கூடாரத்திற்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரும்படி வரவேற்கப்படுகிறீர்கள். நாங்கள் எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல. எந்த ஒரு ஸ்தாபனத்திற்கும் எதிராளிகளும் அல்ல, நாங்கள் வெறுமனே ஸ்தாபனம் அல்லாதவர்கள். ஆகையால் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நாங்கள் எந்த உறுப்பினர் அட்டையும் கொண்டிருக்கவில்லை. நாங்கள் ஒருவரோடொருவர் ஐக்கியத்தை மாத்திரம் கொண்டிருக்கிறோம். தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா அநீதியிலிருந்தும் நம்மை சுத்தம் செய்கிறது. நாம் மீண்டும் சந்திக்கும்மட்டும் தேவனின் கிருபையும் சமாதானமும் உங்கள் ஒவ்வொருவரோடும் இருப்பதாக. தேவன்தாமே வியாதிகளை உங்கள் மத்தியிலிருந்து நீக்கி, உங்களுக்கு நல்ல சுகத்தையும், இன்றிரவு பத்திரமாக வீட்டிற்கு செல்லவும், நல்ல ஆரோக்கியத்தையும், பெலனுமளிப்பாராக.மீண்டும் உங்களை புதன் கிழமையிலே இங்கே சந்திப்பேன் என நம்புகிறேன். 85.அது மட்டுமாக தேவனுடைய கிருபை உங்களோடிருக்கட்டும். இப்பொழுது நாம் எழும்பி நிற்கலாம் (பாஸ்டர்...) இப்பொழுது நம்முடைய பாஸ்டர் சகோதரன் நெவில் அவர்கள் ஜெபித்து கூட்டத்தை முடித்து வைப்பார். 2